வியாழன், 15 ஜனவரி, 2015

ஸ்பைஸ் ஜெட்டை மாறன் விற்று விட்டார்

நாம் இரண்டு நாள் முன்னர் எழுதிய பதிவில் ஸ்பைஸ் ஜெட் கை மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று கூறி இருந்தோம்.


பார்க்க: Spice Jet - கைவிட்ட மாறன், கைகொடுக்கும் அஜய் சிங்இன்று தம்மிடம் உள்ள மொத்த பங்கையும் நிறுவனர் அஜய் சிங்க்கிடம் விற்று விட்டு முற்றிலும் விலகுகிறார். இதன் மூலம் நிறுவனத்தின் 52% பங்குகள் கை மாறுகின்றன.

நான்கு வருடங்கள் முன் 750 கோடிக்கு நிறுவனத்தை வாங்கிய இன்று அதனை விட குறைவான தொகைக்கு விற்று உள்ளார். (இன்றைய பங்கின் மதிப்பு படி பார்த்தால்)

விமானத்துறையில் அனுபவம் இல்லாதது ஸ்பைஸ் ஜெட்டை தக்க வைக்க முடியாமல் போனதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

அதே நேரத்தில் நான்கு வருடம் முன் அதிக அளவு பண கையிருப்பை வைத்து வெற்றிகரமாக நடத்திக் காட்டிய  அஜய் சிங் கையில் செல்வது ஸ்பைஸ் ஜெட்டிற்கு சாதகமான ஒன்று.

பார்க்க: Spice Jet மீண்டும் எழுச்சியாக பறக்குமா?

English Summary:
Maran sells his entire stake in Spice Jet to Ajay singh.


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக