புதன், 7 ஜனவரி, 2015

எண்ணெய் விலை குறைவு ஆயில் நிறுவனங்களை எவ்வாறு பாதிக்கும்?

தற்போது உலக அளவில் கச்சா எண்ணெய் விலை 47$ க்கு அருகில் வந்து விட்டது. இது செயற்கையான மாற்றம் தான். அதனால் விரைவில் மேல் வரும் வாய்ப்பு உள்ளது.




அமெரிக்கா பாறைகளின் இடுக்குகளில் எண்ணெய் எடுக்கும் தொழில்நுட்பத்தை சோதித்து பார்க்கவும், ரஷ்யாவின் பொருளாதரத்தை நிலை குலைப்பதற்கும் இந்த கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியை பயன்படுத்தி வருகிறது.

பார்க்க: முக்கோண அரசியலில் அடிமாட்டு விலைக்கு செல்லும் பெட்ரோல்

சரியான கிரிமினல் ஆட்களாக இருப்பார்கள் போல. இப்படி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் தந்திரமாக அடிப்பது கடினமான காரியம் தான்.

இந்த இடைவெளியில் தான் இந்தியா தனது நொடிந்து போன பொருளாதரத்தை ஆசுவாசப்படுத்திக் கொள்ள அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் அந்நிய செலாவணி பற்றாக்குறை என்ற நம்மால் கட்டுப்படுத்த முடியாத காரணி ஒன்று கட்டுக்குள் வருகிறது. இந்திய அரசிற்கு நல்ல நேரம் தான்.

ஆனால் இந்த கச்சா எண்ணெய் விலை குறைவு எல்லா நிறுவனங்களுக்கும் நேர்மறை பலன்களை அள்ளித் தருமா என்றால் இல்லை என்று சொல்லலாம்.

உள்நாட்டில் கச்சா எண்ணெய் பொருட்களை சொந்தமாக உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு கணிசமான பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

உலக அளவில் கச்சா எண்ணெய் விலை பாதிக்கும் கீழே குறையும் போது உள்நாட்டு நிறுவனங்கள் அதிகமாக விலைக்கு விற்றால் யார் வாங்க வருவார்கள்? கஷ்டம் தான்.

இது நேரடியாக எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களின் லாபத்தை பாதிக்கும். நமது எண்ணெய் நிறுவனங்களுக்கு ஆகும் உற்பத்தி செலவு வளைகுடா நாடுகளை விட அதிகம் என்பதையும் நினைவில் கொள்க. ஒரு கட்டத்திற்கு கீழ் விலை குறையும் போது அவர்களுக்கு கட்டுப்படியாகாது போய் விடும்.




இதனால் ONGC, Cairn, Reliance Industries, Selan போன்ற உள்நாட்டு எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுக்கு எதிர்மறை பாதிப்பையே ஏற்படுத்தும்.

அதே நேரத்தில் எண்ணையை வாங்கி சப்ளை செய்யும் நிறுவனங்களுக்கு நேர்மறை பலனை கொடுக்கும். குறைவான விலைக்கு எண்ணையை வாங்கி விநியோகிக்க முடியும்.

கச்சா எண்ணெய் விலை குறையும் போது எண்ணெய் நிறுவனங்களுள்ளே பாதிப்புகள் வேறு விதமாக உள்ளது என்பதை அறிய இந்த பதிவு உதவும்.

எமது அடுத்த போர்ட்போலியோ ஜனவரி 10ல் வெளிவருகிறது. 8 துறைகளை சார்ந்த 8 நிறுவனங்கள் பரிந்துரை செய்யப்படும். மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை பார்க்க..

மின் அஞ்சல் முகவரி: muthaleedu@gmail.com

English Summary:
Crude oil prices are decreasing all over the world. Domestic oil production companies will get negative impact. Same time, oil suppliers see positive impact.

பார்க்க:
« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக