செவ்வாய், 6 ஜனவரி, 2015

ஒரே நாளில் 800 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்

நேற்று தான் காரணமில்லாமல் கூடிக் குறையும் பங்குச்சந்தை என்று எழுதி இருந்தோம்.

எந்த வித புற நிகழ்வுகளின் தாக்கம் அதிகம் இல்லாத சூழ்நிலையில் சந்தை ஏற்றி இறக்குபவர்கள் கையில் சிக்கி உள்ளது. அவர்கள் கையில் நாம் சிக்காமல் ஏற்ற இறக்கங்களை நமக்கு சாதகமாக பயன்படுத்துவது தான் புத்திசாலித்தனமாக இருக்கும்.நேற்று மட்டும் 800 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் சரிந்துள்ளது.

இதற்கு இரண்டு காரணங்கள் கூறப்பட்டன.
  • ஒன்று, கிரீஸ் நாட்டில் பொருளாதார தேக்கம் தொடர்பாக வரும் தகவல்கள்
  • இரண்டாவது, கச்சா எண்ணையின் படு வீழ்ச்சியான சரிவு.

இந்த இரண்டில் கிரீஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார தேக்கம் நமக்கு ஓரளவு பாதிப்பை ஏற்படுத்தலாம். இதனால் பாதிக்கப்படும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதரத்தால் சில இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதில் மென்பொருள், மருந்து துறை சார்ந்த நிறுவனங்களை குறிப்பிட்டு சொல்லலாம்.

ஆனால் இரண்டாவது காரணமாக கச்சா எண்ணையின் கணிசமான வீழ்ச்சி என்பது இந்தியாவிற்கு சாதகமான ஒன்றே. இது ONGC, Cairn போன்ற உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். மற்றவர்களுக்கு இது சாதகமானதே. இந்திய அந்நிய செலாவணியைக் கட்டுப்படுத்துவதற்கு இந்த நிகழ்வு பெரிதும் உதவும்.

ஆனால் இதனை கொண்டாடுவதற்கு குறுகிய கால வர்த்தகர்கள் விடாமல் பார்த்துக் கொண்டார்கள். அவர்களுக்கு மந்தமான சந்தையை விட ஏற்ற, இறக்கங்கள் அதிகமான சந்தையே தேவை. அதனால் இடைவெளியை தீர்மானித்து மேலும் கீழும் இறக்கி வருவார்கள்.

அதற்காக வெறும் கிரீஸை மையமாக வைத்து 3% அளவு சந்தை சரிந்தது வியப்பளிக்கிறது.

என்னவாக இருந்தாலும், இந்த வாரம் வெளிவரும் நமது போர்ட்போலியோவிற்கு இந்த நிகழ்வு சாதகமாக உள்ளது. பல பங்குகள் குறைந்த விலையில் கிடைக்கும் என்று நம்புகிறோம்.

மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை பார்க்க..

English Summary:
Indian share market losses more than 3% due to global factors like crude oil and european economy. 

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக