திங்கள், 12 ஜனவரி, 2015

விலையில்லா பெட்ரோல் திட்டத்திற்கு தயாராகும் கச்சா எண்ணெய்

இன்று கச்சா எண்ணெய் விலை பரேல்லுக்கு 47$ என்பதை விடவும் கீழே சரிந்தது. பரேல்லுக்கு 30$ வரை செல்லும் என்றும் கணித்துள்ளார்கள்.
இப்படியே போனால் இலவசமாக வீட்டுக்கு வந்து ஊற்றி விட்டுப் போனாலும் ஆச்சர்யமில்லை.

இதனால் தமிழ்நாடு அரசின் விலையில்லா திட்டத்திற்கு பெட்ரோலும் தகுதி பெறும் காலம் விரைவில் வருகிறது.

இந்த விலை குறைவுகளால் பெட்ரோல் நிறுவனங்களை விட சில மற்ற துறை பங்குகள் கணிசமாக உயர்ந்தது வியப்பைக் கொடுத்தது.

Asian Paint போன்ற பெயிண்ட் நிறுவனங்களும்  தலைக்கு எண்ணெய் தயாரிக்கும் Marico போன்ற நிறுவனங்களின் பங்குகளும் கணிசமான லாபத்தைக் கொடுத்தது.

ஏனென்றால் இவற்றின் மூலப்பொருட்களும் கச்சா எண்ணையில் இருந்து வருவது கவனிக்கத்தக்கது.

பார்க்க:  பெட்ரோல் விலை குறைந்தால் பெயிண்ட் கம்பெனிக்கும் யோகம் தான்..

English Summary:
Crude Oil Price falls below 47$. Paint and Hair companies also getting more benefit.


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக