திங்கள், 12 ஜனவரி, 2015

SIP முறையில் முதலீடு செய்வது எப்படி பயனாகிறது?

எந்தொவொரு முதலீட்டிலும் ரிஸ்கை தவிர்ப்பதற்கு இரண்டு அடிப்படை வழிமுறைகள் இருப்பதை உணரலாம்.


முதலாவது,
நம்மிடம் இருக்கும் பணம் அனைத்தையும் ஒரே முதலீட்டில் போட்டு வைப்பது ஆபத்தானது. இதனால் அந்த ஒரு முதலீட்டுத் தன்மையில் ஏற்படும் பாதிப்பானது நம்மில் இருக்கும் மொத்த செல்வதையும் ஒரே நேரத்தில் அடித்து சென்று விடும்.

பார்க்க: முதலீடை பிரிப்பது எப்படி?
இரண்டாவது வழிமுறை ஒரே நேரத்தில் எல்லா பணத்தையும் ஒரு முதலீட்டில் போடுவதும் அதிக ரிஸ்கை கொடுக்கும்.


அதாவது ஏற்ற, இறக்கங்கள் எல்லா முதலீட்டிலும் உள்ளது. அதனை முன்கூட்டியே துல்லியமாக கணிக்கும் நேர இயந்திரம் நம்மிடம் யாரும் இல்லை. அதனை ஓரளவு தான் கணிக்க முடிகிறது.

இதனால் கணிப்பு சிறிது தவறினாலும் முதலீட்டில் கணிசமான நஷ்டம் ஏற்பட்டு விடும்.

இந்த சூழ்நிலையில் தான் பொருளாதார மேதைகள் கொண்டு வந்த ஒரு முறை முக்கியத்துவம் பெறுகிறது. இதனை SIP (Systematic Investment Plan) என்று குறிப்பிடுகிறார்கள். நேரத்தை அடிப்படையாக வைத்து முதலீட்டைப் பிரித்துப் போடுதல் என்றும் சொல்லலாம்.

அதாவது இருக்கும் பணத்தை ஒரே நேரத்தில் முதலீடு செய்வதை விட மாதம் மாதம் ஒரு தொகையை முதலீடு செய்தால் கூடுதல், குறைவுகள் எல்லாம் ஓரளவு சமநிலைப்படுத்தப்பட்டு விடும்.

இது கிட்டத்தட்ட நமது ஊரில் இருக்கும் சீட்டு கட்டும் முறையை போன்றது என்றே சொல்லலாம். சீட்டு கட்டும் முறையில் ஒவ்வொரு மாதமும் நிலையான தொகையை செலுத்தி வருவோம். வித்தியாசம் என்னவென்றால், அதில் செலுத்தி வரும் தொகையின் மதிப்பில் மாற்றம் இருக்காது.

ஆனால் பங்குவர்த்தகம் முறை சார்ந்த Mutual Fund, Stocks, Gold, Commodities போன்றவற்றில் மதிப்புகள் அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கும். அதாவது ஒரு மாதத்தில் 1000 ரூபாய்க்கு பத்து பங்குகள் வாங்க முடிந்தால் அடுத்த மாதத்தில் அதே 1000 ரூபாய்க்கு எட்டு பங்குகள் வாங்கும் சூழ்நிலையும் ஏற்படலாம்.

இப்படி அதிக அளவு உருவாகும் மாற்றங்களை சராசரி செய்ய SIP முறை பெரிதும் உதவும்.

உதாரணத்திற்கு கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.

ஒருவர் 30000 ரூபாயை ஒரே தவணையில் Mutual Fundல் 10 ரூபாய் NAV மதிப்பில் முதலீடு செய்கிறார்.

மற்றொருவர் அதே 30000 ரூபாயை 5000 ரூபாய்களாக பிரித்து ஆறு தவணைகளில் முதலீடு செய்கிறார்.
சந்தை மதிப்புகள் குறைந்து கூடும் போது இவரால் அதிக அளவு சராசரி செய்து நஷ்டத்தை குறைக்க முடிகிறது. சந்தை குறையும் போது அதிக அளவு மதிப்புள்ள அலகுகளை(Unit) பெற முடிகிறது. ஆனால் மற்றவருக்கு சந்தை குறைவதால் வரும் பலன்கள் கிடைப்பதில்லை.

இதனால் ரிஸ்கை பற்றி அதிகம் கவலைப்படுபவர்களுக்கு SIP முறை ஒரு நன்கு பொருந்தும் வழியாக உள்ளது.

முதல் முதலாக தமது சேமிப்பை தொடங்கும் இளைஞர்களுக்கு அவ்வளவாக பங்குச்சந்தை, Mutual Fund போன்றவற்றை பற்றிய தெளிவு  இருக்காது. அந்த சமயத்தில் SIP முறையில் சென்றால் ரிஸ்க் இல்லாமல் பல்ஸ் பார்த்து படித்துக் கொள்ளலாம்.

அதே போல், மாத சம்பளத்தில் சிறுக சிறுக செமிப்பவர்களும் SIP முறையை நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அவர்களுக்கும் ஏற்றது.

தொடர்பான கட்டுரைகள்:

English Summary:
Systematic Investment Plan helps to average the risk and returns coming from volatile market.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

3 கருத்துகள்:

  1. மிகவும் பயனுள்ள பதிவு. கேட்டவுடன் இந்த பதிவை எழுதியமைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  2. மிகவும் பயனுள்ள பதிவு. கேட்டவுடன் இந்த பதிவை எழுதியமைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கு நன்றி ராஜா!

    பதிலளிநீக்கு