வியாழன், 8 ஜனவரி, 2015

தெரியுமா? TITAN என்பது ஒரு தமிழக அரசு நிறுவனம்

TITAN என்பது இந்தியாவில் பிரபலமான கடிகாரங்கள் மற்றும் வாட்ச் தயாரிக்கும் நிறுவனம் என்று நமக்கு தெரிந்து இருக்கும்.


பலருக்கும் இந்த நிறுவனம் டாடாவின் துணை நிறுவனம் என்றே அறியப்பட்டு இருக்கும்.



ஆனால் பிரபலமாகாத ஒரு உண்மை என்னவென்றால் TITAN நிறுவனத்தில் அதிக பங்குகள் தமிழக அரசிற்கு தான் சொந்தமானது.

தமிழக அரசின் TIDCO (Tamil Nadu Industrial Development Corporation) என்ற நிறுவனம் தான் 27% பங்குகளை வைத்து உள்ளது.

அதற்கு அடுத்து தான் Tata Sons 16% பங்குகளை வைத்து உள்ளார்கள்.

இந்த நிறுவனத்தில் பிரபல பங்கு முதலீட்டாளர் ராகேஷ் ஜூன்ஜூன்வாலாவும் 6% பங்குகளை பல ஆண்டுகளாக வைத்து உள்ளார் என்பதும் குறிப்பிட்டத்தக்கது.

1987ல் டாடாவும், TIDCOவும் இணைந்து உருவாக்கிய Joint Venture நிறுவனம் தான் இன்று உலக அளவில் பிரபலமாக உள்ள Titan.

TITAN நிறுவனத்தின் Social Responsibility நிகழ்வுகளில் தமிழ்நாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.

ஒவ்வொரு முறை TITAN வாட்ச் வாங்கும் போதும் அதில் ஒரு பங்கு லாபம் தமிழக அரசிற்கும் செல்கிறது என்பதை நினைவில் கொள்க. TITAN குழுமம் எனபது வாட்ச் மட்டுமல்லாமல் நகைகள் விற்பனை செய்யும் TanishQ, Skinn Perfumes, Titan Eye+ போன்றவற்றையும் உள்ளடக்கியதாகும்.

ஆனால் என்னவோ கடந்த பத்து ஆண்டுகளில் TIDCO தனது வேலையை டைடல் பார்க் உருவாக்குவதோடு நிறுத்திக் கொண்டது. அரசியலும் கலந்து கொண்டதால் முன்பு போல் திறனாக செயல்பட முடியவில்லை என்றே நினைக்கிறோம்.

தமிழகத்தில் ஏராளமான தொழில் முனைவோர்களை உருவாக்குவதற்கு TIDCO மீண்டும் உருப்படியான திட்டங்களோடு வருவது மிகவும் அவசியமாக உள்ளது.

தொடர்புடைய கட்டுரைகள்:

English Summary:
The unpopular truth is that Titan is joint venture between Tamil Nadu Industrial Development Corporation and Tata Sons.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

3 கருத்துகள்:

  1. dear sir how to find the stock five year record collect.eps collect to money control .com . but how find market price pl give information. then one stock selct which is read in balance sheet.then stock select no dubt stock is good or which one is good pl.what is equtiy devidend

    பதிலளிநீக்கு