சில மாதங்கள் முன்பு வரை விமானத் துறை பங்குகளை யாரும் சீண்டாமல் தான் இருந்தனர். ஆனால் திடீர் என்று பெரிய தலைகள் எல்லாம் விமான பங்குகள் பக்கம் கவனத்தை திருப்ப ஆரம்பித்துள்ளனர்.
கடந்த வாரம் இந்திய வாரன் பப்பெட் என்று கருதப்படும் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா ஜெட் ஏர்வேஸ் பங்குகளை ஐம்பது கோடி ரூபாய் அளவிற்கு வாங்கி உள்ளார்.
இது கிட்டத்தட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் மொத்த பங்குகளில் ஒரு சதவீதம் ஆகும்.
மனிதர் அதில் மட்டுமல்லாமல் பங்குச்சந்தையில் உள்ள மற்றொரு விமான நிறுவனமான ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திலும் கணிசமாக பங்குகளை வாங்கி உள்ளார்.
அதே போல் ஐபிஒவில் வெளிவரவிருக்கும் இண்டிகோ நிறுவன பங்குகளுக்கும் கணிசமான அளவில் விண்ணப்பித்துள்ளார்.
இப்படி ஒரு விமான நிறுவனங்களை கூட விடாமல் முதலீடு செய்வதில் காரணம் இல்லாமல் இல்லை.
கடந்த வருடங்களில் பார்த்தால் விமான நிறுவனங்களின் 45% செலவை எரிபொருட்கள் குடித்து இருந்தன.
ஆனால் கடந்த இரு வருடங்களில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைவு ஏற்பட்டது விமான நிறுவனங்களுக்கு சாதகமாக மாறி உள்ளது.
எரிபொருள் செலவு பாதியாக குறைந்து போனதால் லாப மார்ஜினும் கணிசமாக கூடியுள்ளது.
இதனால் தொடர்ந்து பல காலாண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வந்த ஸ்பைஸ் ஜெட், ஜெட் ஏர்வேஸ் லாபம் கொடுக்க ஆரம்பித்துள்ளன.
அதே வேளை இந்திய உள்நாட்டு விமான துறை நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. காலி இருக்கையுடன் விமானங்கள் செல்வது கணிசமாக குறைந்துள்ளது.
ஒரு பக்கம் நல்ல வளர்ச்சி, இன்னொரு பக்கம் செலவு குறைவு என்று இரண்டும் விமான நிறுவனங்களின் லாபத்தை கூட்டி உள்ளன.
பொதுவாக நஷ்டத்தில் இயங்கும் போது அந்த நிறுவனத்தின் பங்குகள் கண்டு கொள்ளாமல் விடப்படும். அவ்வாறு தான் ஸ்பைஸ் ஜெட், ஜெட் ஏர்வேஸ் நிறுவனங்களும் நஷ்டத்தில் இயங்கிய போது தங்கள் ஐபிஒ விலையிலிருந்து கீழ் வந்து மிக மலிவாக இருந்தன.
ஆனால் தற்போது வெளிவரும் இண்டிகோ ஐபிஒ பங்கின் விலை 735 ரூபாய்க்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதன் படி பார்த்தால் இண்டிகோ நிறுவனத்தின் மதிப்பு 27,000 கோடி வருகிறது.
அதாவது 36% விமான சந்தை மதிப்புடைய இண்டிகோ நிறுவனம் 27,000 கோடி ரூபாய்க்கு மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கும் ஆறு மடங்கிற்கும் அதிகமாக விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.
அப்படி என்றால் 22% விமான சந்தையைக் கொண்டுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 16,000 கோடிக்கும், 12% விமான சந்தையைக் கொண்டுள்ள ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் 9,000 கோடிக்கும், மதிப்பிடப்பட்டு இருக்க வேண்டும்.
ஆனால் இன்றைய பங்குச்சந்தை மதிப்பின் படி இந்த நிறுவனங்களின் மதிப்புகள் 5,000 மற்றும் 3,000 கோடி தான். அதனால் மதிப்பிடுதலில் இரண்டு மடங்கிற்கும் குறைவாக தான் இந்த பங்குகளின் விலைகள் வருகிறது.
இவைகள் இண்டிகோ நிறுவனத்தை விட கொஞ்சம் கடன் வைத்துள்ளன. ஆனால் அவற்றையும் தள்ளி பார்த்தால் இவ்வளவு மதிப்பு வித்தியாசம் வர வேண்டிய தேவை இல்லை.
ராகேஷ் ஜூன்ஜூன்வாலா குத்து மதிப்பாக முதலீடு செய்பவர் அல்ல. Value Investing அடிப்படையில் முதலீடு செய்பவர். அதற்கு நாம் மேலே கூறிய காரணங்களும் கூட ஒன்றாக இருக்கலாம்.
இந்த காரணத்தில் தான் நமது தளத்தில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தை கடந்த வருடம் பரிந்துரை செய்து இருந்தோம். அது தற்போது 200% லாபம் கொடுத்து வருகிறது என்பது குறிப்பிட்டத் தக்கது.
பார்க்க:

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக