இன்று பிரதமர் மோடி அவர்கள் தங்க பத்திரங்கள் மற்றும் தங்க நாணயங்கள் தொடர்பான திட்டத்தினை தொடங்கி வைக்கிறார்.
இந்த திட்டம் கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டாலும் திட்டமிடுதல் மற்றும் ரிசர்வ் வங்கி ஒப்புதல் பெறுதல் போன்ற காரணங்களால் தற்போது நடைமுறைக்கு வருகிறது.
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் வீட்டில் பயன்படாமல் இருக்கும் தங்கத்தை முதலீடு முறைக்கு கொண்டு வருதல் மற்றும் தங்கத்தை உலோகமாக வாங்கி வைப்பதை குறைப்பதும் ஆகும்.
இதனால் தங்க இறக்குமதி குறைந்து பெருமளவு அந்நிய செலாவணி மிச்சமாகலாம் என்பது அரசின் கணிப்பு.
பங்குச்சந்தையில் புழங்கும் தங்க ETF போன்ற பத்திரங்களை போல் அரசும் தங்க பத்திரங்களை வெளியிட உள்ளது.
ஆனால் என்ன வித்தியாசம் என்றால், இந்த பத்திரங்களில் அரசு பிக்ஸ்ட் டெபாசிட் போல் வாய் தரவுள்ளது. ஆனால் ETF பத்திரங்களில் இந்த வட்டி கிடையாது. ஏற்கனவே இது பற்றி மிக விரிவாக எழுதி இருந்தோம்.
இந்த பத்திரங்களை நவம்பர் 05 முதல் வாங்கலாம். இதற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி நவம்பர் 20. நவம்பர் 26 முதல் இந்த பத்திரங்கள் விநியோக்கிக்கப்படும். அணைத்து பொது துறை வங்கிகளிலும் இந்த பத்திரங்கள் கிடைக்கும்.
இரண்டு கிராம் முதல் 500 கிராம் வரை வருடத்திற்கு வாங்கி கொள்ளலாம். தற்போது கிராமிற்கு 2684 ரூபாய் என்று நிர்ணயித்துள்ளார்கள்.
அதனால் குறைந்த பட்ச முதலீடு தொகை 5400 ரூபாய் அருகில். அதிக பட்ச முதலீடு தொகை 13,50,000 ருபாய்.
ஒவ்வொரு முறை வெளியீட்டின் போதும் அதற்கும் முன்னர் இருந்த தங்கத்தின் சராசரி விலை வாங்கும் விலையாக நிர்ணயிக்கப்படும். அதே போல் பத்திரங்களை திருப்பி தரும் போது அன்றைய சராசரி விலையில் பணத்தை திருப்பி தருவார்கள். அதனால் தங்க விலையோடு நமது முதலீடும் பெருகிக் கொண்டு இருக்கும்.
இந்த பத்திரங்களின் முதலீட்டுக் காலம் எட்டு ஆண்டுகள். அதற்கு முன்னர் எடுப்பதாக இருந்தால் வைப்பு நிதிகளை போல் சிறிது அபராதத்தோடு எடுத்துக் கொள்ளலாம்.
ஒவ்வொரு வருடத்திற்கும் 2.75% வட்டி தர உள்ளார்கள். அதனால் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள பத்திரங்களை வாங்கினால் வருடத்திற்கு 2,750 ரூபாய் கிடைக்கும். இந்த வட்டி ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தரப்படும். இது கூட்டு வட்டி இல்லை என்பதால் வட்டியை அவ்வப்போது எடுப்பது சிறந்தது. எட்டு வருடங்களுக்கு மொத்தமாக 22,000 ரூபாய் வட்டியாக கிடைக்கும்.
பொதுவாக நமது முதலீடுகளை தங்கம், பங்குச்சந்தை, வைப்பு நிதிகள் என்று பிரித்து வைப்பது நல்லது என்று நமது கட்டுரைகளில் கூறி இருக்கிறோம்.
பார்க்க: முதலீடை எப்படி பிரிக்கலாம் ? - 1
அது போல் நமது முதலீட்டின் 10% தொகையை இந்த கடன் பத்திரங்களில் வைத்துக் கொள்வது நல்லது.
கடந்த பத்து வருட வரலாற்றை பார்க்கும் போது வைப்பு நிதிகளை விட தங்க முதலீடு லாபம் அதிகம் கொடுக்க வாய்ப்பு உள்ளது. அதனால் மிகக் குறைவான ரிஸ்க் எடுப்பவர்கள் கூட இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பெண் குழந்தைகளுக்கு தங்க நகை சேர்ப்பவர்கள் இந்த திட்டங்களில் இணைவதன் மூலம் அவர்கள் முதலீடு தங்கத்தின் விலைக்கேற்ப பெருகிக் கொண்டிருக்கும்.
இந்த பத்திரங்கள் முதிர்ச்சி அடைந்த பிறகு அன்றைய லேட்டஸ்ட் மாடல் நகைகளை வாங்கி கொள்ளலாம். இதனால் அழிப்பது, மாற்றுவது, செய்கூலி, சேதாரம் போன்றவற்றை தவிர்க்கலாம்.
இனி இதில் உள்ள சிறிய பாதகங்கங்களை பார்ப்போம்.
ஆனால் இந்த வட்டிக்கு வருமான வரி கட்டுபவர்கள் வரி கட்ட வேண்டும். வருமான வரி கட்டாதவர்கள் நாம் முன்பு சொன்னது போல் கீழே உள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்ட படிவங்களை வங்கிகளிடம் கொடுப்பதன் மூலம் வரி பிடித்தத்தை தவிர்க்கலாம்.
பார்க்க: பிக்ஸ்ட் டெபாசிட் செய்யும் போது வரியை தவிர்ப்பது எப்படி?
அது போல் இந்த தங்கத்தினால் கிடைக்கும் லாப தொகை Capital Gain Tax என்ற முறையின் கீழே வருகிறது. அதனால் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்து அது எட்டு வருடங்களில் இரண்டு லட்ச ரூபாயாக மாறினால் LTCG என்ற வரி கட்ட வேண்டும்.
இதன்படி, அதிகமாக வந்த ஒரு லட்சத்திற்கு 20% வரி Indexation என்ற பயனை பயன்படுத்திக் கட்டலாம். ஆக, மொத்தத்தில் 10% வரி வரும். அதாவது அதிகமாக வந்த ஒரு லட்சத்திற்கு பத்தாயிரம் ரூபாய் வரை வரி கட்ட வேண்டி இருக்கும்.
தொடர்புடைய கட்டுரைகள்:
நிலங்களை விற்கும் போது இப்படி வரியை சேமிக்கலாம்

Good.keep it up
பதிலளிநீக்குCongrats....👏
பதிலளிநீக்குஇதை bank, post office ல் நேரடியாக போய் தான்விண்ணப்பிக்க வேண்டுமா அல்லது online லிலும் விண்ணப்பிக்க முடியுமா?
பதிலளிநீக்கு