புதன், 11 நவம்பர், 2015

வெளிநாட்டு முதலீடுகளுக்கு வேகமாக திறக்கப்படும் இந்திய சந்தை

பீகார் தேர்தலில் தோற்றதால் பிஜேபியின் பொருளாதார சீர்த்திருத்த நடவடிக்கைகள் மந்தமாகுமோ என்று எதிர்பார்த்த வேளையில் அரசு புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.


இதன்படி பல முக்கிய துறைகளுக்கு வெளிநாட்டு முதலீடுகள் அதிக அளவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.



இது இன்றைய சந்தையிலும் நேர்மறையாக எதிரொலிக்ககலாம்.

நீண்ட காலமாக தனியார் வங்கிகள் தங்களுக்கான அந்நிய முதலீடு வரம்பை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தன. தற்போது நேரடி அந்நிய முதலீடு தனியார் வங்கிகளுக்கு 74% என்று உயர்த்தப்படுகிறது. முன்பு 49% அளவு இருந்தது.

அதே போல் சிங்கிள் பிராண்ட் விற்பனை நிலையங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆப்பிள் ஐபோன் ஸ்டாரை நேரடியாக திறக்கலாம்.

அடுத்து, ரியல் எஸ்டேட் ப்ராஜெக்ட்களுக்கு 100% அந்நிய முதலீடு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் DLF, சோபா, ப்ரெஸ்டீஜ் போறான் பில்டர்கள் அதிக அளவில் பயன் பெறுவார்கள்.

அதே போல் விமானத்துறையில் ஹெலிகாப்ட்டர் சேவைகளுக்கு 100% அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

மீடியா, DTH நிறுவனங்களும் இனி நூறு சதவீத அந்நிய முதலீடுகளை திரட்டலாம். இறுதியாக ரப்பர், காபி நிறுவனங்களுக்கும் 100% அந்நிய முதலீடு அனுமதி கிடைத்துள்ளது.

இந்த துறை சார்ந்த நல்ல நிறுவனங்களின் பங்கு மதிப்புகளில் வேகமான உயர்வுகளை இனி பார்க்கலாம்.

மோடி அரசு பதவி ஏற்ற பிறகு தற்போது தான் அதிக அளவில் அந்நிய முதலீடு திறக்கப்பட்டுள்ளது.

இனி மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்து GST வரியும் நிறைவேற்றப்பட்டால் பங்குச்சந்தையில் பெரிய அளவிலான உயர்வுகளைக் காணலாம்.



« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக