வியாழன், 5 நவம்பர், 2015

பீகார் தேர்தல் முடிவை உற்று நோக்கும் சந்தை

கடந்த வாரமே பீகார் தேர்தல் முடிவுகள் சந்தையில் சில தாக்கங்களை ஏற்படுத்தலாம் என்று எழுதி இருந்தோம்.


ஒரு வலுவான முதல்வர் வேட்பாளர் இல்லாதது பிஜேபி அணிக்கு பாதகமான விடயம் தான்.நேற்று வரை வெளியான எக்ஸ்ட் போல் முடிவுகள் பிஜேபி அணிக்கு சாதகமாக இல்லை. ஞாயிறு அன்று முடிவுகள் வெளியாக உள்ளன.

இது நிதர்சனமாகும் பட்சத்தில் சந்தை குறுகிய காலத்திற்கு எதிர்மறையாக எடுத்துக் கொள்ள வாய்ப்பு அதிகம் உள்ளது. வரும் திங்கள் சந்தையில் இந்த ஏற்ற, இறக்கங்களை பார்க்கலாம்.

இது வரை வெளிவந்த சென்செக்ஸ் நிறுவனங்களின் நிதி முடிவுகளை பார்த்தால் பரவாயில்லை என்று தோன்றுகிறது. ஆனாலும், வளர்ச்சி என்பது முழு வேகம் பிடிக்கவில்லை.

உலோகங்கள், மற்றும் கச்சா எண்ணெய் விலை குறைவு காரணமாக விற்பனையில் வளர்ச்சி காணவில்லை. ஆனால் லாப மார்ஜின் கூடியுள்ளது. சில நிறுவனங்கள் இந்த விலை குறைவை நுகர்வோர்களுக்கு பயனாக கொடுத்துள்ளன என்பதையும் பார்க்க முடிகிறது.

இதனால் சென்செக்ஸ், நிபிட்டி நிறுவனங்களின் EPS மதிப்பில் எந்த மாற்றமும் பெரிய அளவு ஏற்படவில்லை. இது P/E மதிப்பிலும் எதிரொலித்தது.

வரலாற்று சராசரியாக இந்திய சந்தையின் P/E மதிப்பு 20க்கு கீழ் தான் இருந்து வந்தது. ஆனால் தற்போதைய தாழ்வுகளிலும் இந்த P/E மதிப்பு 21க்கு மேல் தான் உள்ளது.

அதனால் பீகார் தேர்தல் முடிவுகளைக் காரணம் காட்டி சந்தை இன்னும் 5% வரை கீழே வர வாய்ப்பும் இருப்பது மறுப்பதற்கு இயலாது.

இந்த சமயத்தில் மூடி போன்ற நிறுவனங்கள் இந்திய வங்கிகளில் மாறி வரும் வாராக்கடன்கள் வீழ்ச்சி நம்பிக்கை தருவதாக கூறி உள்ளன. இதனை ஒரு நேர்மறை குறிப்பாக எடுத்துக் கொள்ளலாம்.

ஆனாலும் அடுத்த இரண்டு காலாண்டுகள் மந்தமாக இருப்பதற்கே வாய்ப்புகள் உள்ளன. நீண்ட கால முதலீட்டாளர்கள் அது வரை துவளாமல் இருப்பது அவசியமாக உள்ளது.« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக