திங்கள், 9 நவம்பர், 2015

ஒரே நாளில் 18% உயர்ந்த இண்டிகோ ஐபிஒ பங்கு

நமது தளத்தில் இண்டிகோ விமான நிறுவனத்தின் ஐபிஒ பங்கை வாங்குமாறு பரிந்துரை செய்து இருந்தோம்.

பார்க்க: Indigo IPO பங்கை வாங்கலாமா?

ஆறு மடங்கிற்கும் அதிகமாக விண்ணப்பங்கள் வந்தாலும் சில்லறை முதலீட்டாளர்கள் பெரிதும் ஆர்வம் காட்டாமல் இருந்தனர். ஆனாலும் இன்று லிஸ்ட் செய்யப்பட்ட நிலையில் நல்ல உயர்வை கொடுத்தது.இன்று சந்தைக்கு வந்த இண்டிகோ பங்கு விண்ணப்பிக்கப்பட்ட விலையில் இருந்து 18% வரை உயர்வை சந்தித்தது.

ஐபிஒவில் 760 ரூபாய் அதிக பட்ச விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இன்று சந்தைக்கு வந்த சில மணித்துளிகளில் பங்கு 900 ரூபாய்க்கு அருகிலும் வந்தது.

அண்மையில் வெளிவந்த நிறைய ஐபிஒக்கள் விண்ணப்பிக்கப்பட்ட விலைகளில் இருந்து கீழே வந்து இருந்தன.

அதில் இண்டிகோ விதி விலக்காக நல்ல உயர்வை கொடுத்து.

இண்டிகோ பங்கு கிடைத்தவர்களுக்கு  இன்று டபுள் டமாக்கா தீபாவளி தான்..வாழ்த்துக்கள்! மகிழ்ச்சியை கீழே பகிர்ந்தால் நன்றாக இருக்கும்!

தற்போது லாபம் உறுதிபடுத்த நினைப்பவர்கள் விற்றுக் கொள்ளலாம். அதே துறையில் உள்ள spice jet, jet airways போன்ற பங்குகள் இந்த பங்கை விட மலிவாக கிடைக்கிறது.

தொடர்புடைய கட்டுரைகள்:
ஏன் விமான பங்குகளை பெரிய தலைகள் வாங்கி குவிக்கிறார்கள்?


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

1 கருத்து: