இந்தியாவில் அமேசானுக்கு போட்டியாக நம்பர் ஒன் இடத்தில் இன்னும் இருப்பது ப்ளிப்கார்ட்.
ஆனாலும் யார் கொடுத்த ஐடியாவோ இனி மொபைல் ஆப்பில் மட்டும் தான் ப்ளிப்கார்ட் சலுகைகள் வரும் என்று அறிவிப்பு செய்ய தொடங்கி விட்டனர். இதற்கு அவர்களது விறபனையில் 70 முதல் 80% மொபைல் மூலமே வருகிறது என்பதை காரணமாக சொன்னார்கள்.
அப்படி என்றால் மீதி 30% வாடிக்கையாளர்களை ஆப் வைத்து இருந்தால் தான் விற்போம் என்று ப்ளிப்கார்ட் எப்படி சொல்லலாம் என்று கேள்விகள் எழுந்தன.
முதலில் தாங்கள் வாங்கிய MYNTRA இ-காமர்ஸ் தளத்தில் தான் இதனை அறிமுகப்படுத்தினார்கள். ஆனால் ஆப் மட்டும் என்பதில் கணிசமான விறபனையை MYNTRA இழந்தது.
அதனை பார்த்து ஸ்னேப்டீல், அமேசான் போன்ற தளங்கள் நாங்க ஆப் மட்டும் என்ற நிலைக்கு செல்ல மாட்டோம், எங்களுக்கு எல்லா பயனாளிகளும் முக்கியம் என்று அறிவித்து விட்டனர்.
ப்ளிப்கார்ட் மட்டும் ஆப் மட்டும் என்ற நிலைக்கு போகலாமா? வேண்டாமா? என்ற திரிசங்கு நிலையில் இருந்து கொண்டு இருந்தனர்.
அதனை கடந்த பிக் பில்லியன் டாலர் நிகழ்வில் சோதித்தும் பார்த்து விட்டனர். சில சலுகைகள் ஆப் வைத்து இருப்பவர்களுக்கு மட்டும் என்று கூட வைக்கப்பட்டு இருந்தன.
இன்னும் இந்தியர்கள் குறைவான மெமரி உள்ள ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகின்றனர். அதில் ஆப் வைத்துக் கொள்வதற்கு தேவையான மெமரி இல்லை. அப்படியே இன்ஸ்டால் செய்து கொண்டாலும் அடிக்கடி அப்டேட் செய்ய வேண்டி உள்ளது.
இப்படி அதில் ஏகப்பட்ட பிரச்சினைகள் வரவே நிறுத்தி வைக்கப்பட்ட மொபைல் இணையதளத்தை மீண்டும் கொண்டு வந்து விட்டனர்.
முன்னர் ப்ரௌசரில் flipkart.com என்று பதியும் போது அவர்களது ஆப் இன்ஸ்டால் செய்ய சொல்லி கேட்கும். அதன் பிறகு ஆப் மூலம் பொருட்களை வாங்கும் நிலையும் இருந்தது. இனி அப்படி இருக்காது.
இவ்வாறான சில அசௌகரியங்களால் ஆப் மட்டும் என்ற நிலையில் இருந்து ப்ளிப்கார்ட் பின் வாங்கியுள்ளது. நல்ல முடிவு!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக