கடந்த வெள்ளி இரவில் நடைபெற்ற பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலால் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மரணம் அடைந்துள்ளனர்.
இந்தக் கொடிய சம்பவத்தால் உலக அளவில் இன்று பங்குச்சந்தைகள் பதற்றத்திலே காணப்படுகிறது.
அதுவும் G20 மாநாடு நடைபெறும் சமபயத்தில் சம்பவம் நடைப்பெற்று இருப்பதால் வளர்ந்த நாடுகள் சார்பில் பதிலடி கட்டாயம் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தாக்குதல் கச்சா எண்ணெய் உற்பத்தியாகும் பிரதேசமான சிரியாவை மையபப்டுதி நடைபெறலாம் என்று கணிப்பு இருப்பதால் எண்ணெய் விலைகளில் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்று கணித்துள்ளார்கள்.
இது போக, பெரிய அளவில் போர் ஏதும் நடைபெற்றால் பாதுகாப்பான முதலீடை நோக்கி ஓடுவார்கள் என்ற நம்பிக்கையில் தங்கம் விலைகளில் ஏற்றம் காணலாம்.
ஆனாலும் மேலே சொன்னவை எல்லாமே அனுமானங்கள் தான். அடுத்து எடுக்கப்படும் முடிவுகள் தான் பலவற்றை தீர்மானிக்கும்.
கடந்த வெள்ளி இரவில் அமெரிக்க சந்தை இதனை எதிரொலித்தது. அதன் தொடர்ச்சியாக இன்று காலையிலே ஆசியா சந்தைகள் சரிவிலே இருந்தன.
இந்திய சந்தை ஏற்காணவே தொடர்ச்சியாக கடந்த வாரம் சரிந்து இருந்ததால் சிறிது அளவிலே கீழ் வீழ்ந்தது.
அடுத்து கடந்த இரு காலாண்டுகளாக மீண்டு வந்த ஜப்பான் பொருளாதாரம் இந்த காலாண்டில் 0.3% என்று வளர்ச்சி குறைந்துள்ளது. அதனால் பொருளாதார மந்த நிலைக்கு செல்கிறதா என்று அங்கே சந்தேகம் எழுந்துள்ளது.
இப்படி உலக காரணிகள் அனைத்தும் நிறைவாக அமையாமல் தான் இருந்தன.
இதனால் இந்திய சந்தையும் இந்த வாரம் 25,000 என்ற சென்செக்ஸ் நிலையிலே தான் புழங்கலாம் என்று எதிர்பார்க்கலாம்.
என்னவாக இருந்தாலும், தற்போது சில நல்ல பங்குகள் மலிவாகவே கிடைக்கின்றன. சென்செக்ஸ் நிறுவனங்களுக்குள் மட்டும் தேடாமல் மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் நிறுவனங்களையும் உற்று பார்த்தால் சில பங்குகள் கைக்கு அகப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக