வியாழன், 19 நவம்பர், 2015

அமெரிக்க எச்சரிக்கையால் அலறும் மருந்து நிறுவனங்கள்

கடந்த ஒரு வாரமாக பார்த்தால் பங்குச்சந்தையில் மருந்து நிறுவன பங்குகள் கடும் வீழ்ச்சியில் இருக்கின்றன.


இது ஒரு விதத்தில் கடந்த ஒரு ஆண்டாக வேகமாக மேல் ஏறிச் சென்ற மருந்து பங்குகளை மலிவு விலையில் வாங்குவதற்கும் ஒரு காரணமாக அமைந்தது.



இதற்கு அமெரிக்காவின் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் இந்தியாவின் புகழ் பெற்ற Dr.Reddy நிறுவனத்திற்கு எச்சரிக்கை நோட்டிஸ் அனுப்பியது முக்கிய காரணமாக அமைந்தது.

ரெட்டி நிறுவனத்தின் மூன்று மருந்து உற்பத்தி செய்யும் ஆலைகள் அமெரிக்க தரத்திற்கு இணையாக இல்லை என்பது தான் அந்த எச்சரிக்கை.

ரெட்டி நிறுவனத்தை பொறுத்தவரை மருந்து உற்பத்தியில் மிக நீண்ட அனுபவம் பெற்றுள்ளதால் எப்படியும் சமாளித்து வந்து விடுவார்கள் என்பது சில முதலீட்டாளர்கள் நம்பிக்கை. ஆனாலும் அரசு விவகாரம் என்பதால் இதில் எதனையும் முன்பே கணிப்பது கடினமே.

இந்த நிலையில் பங்குச்சந்தையில் தவறான நிதி தகவல்களை தந்துள்ளதாக மற்ற ஒரு குற்றச்சாட்டும் ரெட்டி நிறுவனத்தின் மீது சுமத்தப்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்வது கொஞ்சம் கடினமே.

அதனால் ரெட்டி பங்கை வாங்குபவர்கள் எச்சரிக்கையாக கையாளுவது அவசியம்.

கிட்டத்தட்ட இந்தியாவின் அணைத்து மருந்து நிறுவனங்களுமே அமெரிக்காவில் கணிசமான அளவு மருந்து சந்தையை வைத்துள்ளன.

இந்த எச்சரிக்கை அடுத்து மற்ற மருந்து நிறுவனங்களுக்கும் பரவி விடுமோ என்ற அச்சத்தில் மற்ற மருந்து நிறுவன பங்குகளும் கீழே வீழ்ந்துள்ளன.

இனி எந்த நிறுவனங்கள் எல்லாம் எச்சரிக்கை பெறும் என்றெல்லாம் நாம் சொல்ல முடியாது.

ஆனால் அமெரிக்காவின் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்தின் ஒப்புதல் அண்மையில் வாங்கியுள்ள நிறுவனங்கள் உடனடியாக எச்சரிக்கை பெறுவதற்கான வாய்ப்புகள் என்பது குறைவு. அந்த மாதிரியான நிறுவனங்களை தற்போது வாங்கி போடலாம்.

நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது தான் சில மருந்து பங்குகள் மலிவு விலையில் வந்துள்ளன. வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!



« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

1 கருத்து:

  1. இரண்டு நாட்களாக தான் உங்கள் தளத்தை படிக்கிறேன் கூகிள் கிடைத்த அனைத்து தளமும் பல வருடம்கை கைவிடப்பட்டே உள்ளது நிங்கள் தொடர்ந்து எழதுவது மகிழ்ச்சி நன்றியும் கூட.எனக்கும் ஏன் பங்குசந்தையில் முதலிடு செய்யகூடாது என தொன்றுகிறது உங்கள் தளத்தை படித்த பிறகு. தங்கள் மெயில் ஐடி கிடைக்கும சந்தேகம் கேட்க்க...

    பதிலளிநீக்கு