இன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட SBI வங்கியின் நிதி அறிக்கை வெளியானது.
கடந்த வாரம் தான் சர்வதேச நிதி நிறுவனங்கள் இந்திய வங்கிகளின் வாராக்கடன்கள் குறைவில் நல்ல மாற்றம் தெரிகிறது என்று குறிப்பிட்டு இருந்தார்கள்.
ஆனாலும் இது வரை நிதி அறிக்கைகளைக் கொடுத்த அரசு வங்கிகள் சிறிய வங்கிகள் தான். அவைகளை வைத்து முடிவுகளை தெளிவாக எடுக்க முடியாது.
அதனால் இந்திய வங்கி துறையில் மிகப்பெரிய வங்கி என்பதால் SBI நிதி அறிக்கையும் அதிக அளவில் எதிர்பார்க்கப்பட்டது.
இன்று வெளியான நிதி அறிக்கை எல்லா காரணிகளிலும் நல்ல நிதி அறிக்கையாக பார்க்கப்படுகிறது.
மொத்த லாபம் 25% அதிகரித்துள்ளது. மொத்த வருமானம் 12% அதிகரித்துள்ளது.
வட்டியில் கிடைக்கும் வருமானம் 7% அதிகரித்துள்ளது. டெபாசிட்கள் 10% அதிகரித்துள்ளது. லோன் கொடுப்பது 10% அதிகரித்துள்ளது.
இதர வருமானங்கள் 35% அதிகரித்துள்ளது.
அதே போல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வாராக்கடன்கள் கடந்த நிதி ஆண்டுகள் ஒப்பிட்டால் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. கடந்த காலாண்டில் 4.9% என்று இருந்த வாராக்கடன் 41.15க்கு கீழே வந்துள்ளது.
ஆக, மொத்தத்தில் மிகவும் அருமையான நிதி அறிக்க்கையாக பார்க்கப்படுகிறது.
கடந்த பல மாதங்களாக எஸ்பிஐ பங்கு அங்கும் இங்கும் செல்லாமலே நகன்று கொண்டிருந்தது.
இந்த நிதி அறிக்கை பங்கு விலையை இனி எளிதாக அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லும் என்று எதிர்பார்க்கலாம்.
தொழில் துறையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தை வாராக்கடன்கள் மாற்றம் பிரதிபலிக்கிறது என்றும் கருதி கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக