திங்கள், 9 நவம்பர், 2015

லஷ்மி பூஜைக்காக பங்குச்சந்தையில் முகுரத் வர்த்தகம்

நாளை தென் இந்தியர்களுக்கு தீபாவளி திருநாள். எதிரிகளை வதம் செய்ததற்காக நாம் தீபாவளி கொண்டாடுகிறோம்.


ஆனால் வட இந்தியர்கள் நாளை மறுநாள் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். இதன் நோக்கமும் நம்மில் இருந்து வேறுபட்டது.இதனை லஷ்மி பூஜையாக கொண்டாடுகிறார்கள். அதாவது செல்வம் வரும் நாள்.

செல்வத்திற்கும் பங்குச்சந்தைக்கும் நெருங்கிய தொடர்பு என்பதால் பங்குச்சந்தையிலும் இந்த நாளன்று விசேஷ வர்த்தகம் நடைபெறுகிறது.

ஆரம்பக் காலக் கட்டங்களில் இந்திய முழு பங்குச்சந்தையும் குஜராத்திகள் மற்றும் மராட்டியர்கள் பிடியில் இருந்தது.

அவர்கள் லஷ்மி பூஜையன்று பங்குகளை வாங்கினால் அந்த வருடம் முழுவதும் பங்குச்சந்தையில் நல்ல லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஒரு நடைமுறையை உருவாக்கி வைத்து இருந்தனர்.

அதன்படி, தீபாவளி தினம் விடுமுறை நாளாக இருந்தாலும் மூஹூர்த்த ஒரு மணி நேரத்திற்கு மட்டும் சந்தையை திறந்து வைத்து வர்த்தகம் செய்தனர்.

இது பின்னாளிலும் மாற்றம் இல்லாமல் தொடர்கிறது.

கிட்டத்தட்ட அண்மையில் நம்மிடம் வந்து சேர்ந்த அட்சய திருதி நம்பிக்கை போன்றது என்றும் சொல்லலாம்.

முகுரத் வர்த்தக நாளில் பங்குகளை வாங்க மட்டுமே செய்வார்கள். பங்குகளை விற்க மாட்டார்கள். இதனால் வரலாற்றில் முகுராத் வர்த்தக தினத்தில் மட்டும் சென்செக்ஸ் புள்ளிகள் வீழ்ந்ததே கிடையாது.

இந்த வருடம் முகுரத் வர்த்தகம் நாளை மறுநாள் நவம்பர் 11 அன்று கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் மாலை 5.45 முதல் 6.45 வரை முகுரத் வர்த்தகம் நடைபெறும்.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக