வியாழன், 22 அக்டோபர், 2015

வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் அபராதம் தவிர்க்க சில டிப்ஸ்

கிட்டத்தட்ட நாம் அனைவருமே இந்த பிரச்சினையை சந்தித்து இருக்கலாம்.


வங்கி கணக்குகளில் குறைந்த பட்ச தொகை இல்லாவிட்டால் நாம் போட்டு வைத்து இருந்த தொகையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விடும். ஒரு கட்டத்தில் நெகடிவ் பேலன்ஸ் தொகைக்கும் சென்று விடும். ஆமாம். அபராதமாக பிடித்து விடுவார்கள்.



ஆர்பிஐ இந்த மினிமம் பேலன்ஸ் தொடர்பாக எந்த பொது விதி முறையும் வைத்து இருப்பதில்லை.

அதனால் வங்கிகளுக்கிடையே இந்த மினிமம் பேலன்ஸ் தொகையும் அபராதமும் மாறுபடுகிறது.

அரசு வங்கிகள் என்றால் குறைந்த தொகை வைத்துக் கொண்டால் போதும். தற்போது ஆயிரம் ரூபாய் மினிமம் வைத்துக் கொண்டால் போதும்.


ஆனால் தனியார் வங்கிகளில் 5000 ரூபாய் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற விதி முறை உள்ளது. அப்படி வைத்துக் கொள்ள விட்டால் ஒவ்வொரு மாதம் அல்லது காலான்டிற்கும் கணக்கிட்டு அதற்குரிய அபராதத்தை பிடித்துக் கொண்டே செல்வார்கள்.

உதாரணத்திற்கு ICICI வங்கியில் 5000 ரூபாய் மினிமம் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற விதி முறை உள்ளது.

ஆனால் அதற்கு கீழ் நாம் ஒரு மாதம் முழுமையும் வைத்து இருந்தால் அபராதத்தை நமது டெபாசிட் தொகையில் கழித்து விடுவார்கள். ஒரு கட்டத்தில் 5000 ரூபாய் என்பது 4000, 3000 என்று குறைந்து கொண்டே சென்று கொண்டிருக்கும்.

ஆனால் அண்மையில் ரிசர்வ் வங்கி கூறிய ஒரு முக்கிய விதியின் படி நமது வங்கி தொகையில் இருந்து இந்த அபராதம் பிடிக்கப்படுவதாக இருந்தால் முதலில் நமக்கு தெரிவித்து இருக்க வேண்டும். அப்படி தெரிவிக்காமல் பிடித்து விட்டால் ஆர்பிஐயிடம் புகார் கொடுக்க கூட நமக்கு வழி உள்ளது.

சரி. இந்த 5000 ரூபாய் மினிமம் பேலன்ஸ் என்பதை ஒவ்வொரு நாளும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று விதி முறைகள் இருப்பதாகத் தான் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் அப்படி இல்லை.

இந்த மினிமம் தொகையானது பொதுவாக மாதக்கணக்கில் அல்லது காலாண்டு கணக்கில் தான் சராசரி முறையில் கணக்கிடப்படுகிறது.

ஒரு நாள் 1,50,000 லட்ச ரூபாயை டெபாசிட் செய்து கொண்டு மற்ற நாட்களில் நாம் ஜீரோ பேலன்ஸ் கூட வைத்துக் கொள்ளலாம். அந்த சமயங்களில் அபராதம் செலுத்த தேவையில்லை.

எப்படி என்றால்,
மாத சராசரி மினிமம் பேலன்ஸ் = 1,50,000/30 = 5,௦௦௦ ரூபாய்.

சராசரி முறையில் தான் கணக்கிடுகிறார்கள். முப்பது நாட்களுக்கும் ஒன்றரை லட்சம் ரூபாய் சராசரி பார்த்தால் ஐயாயிரம் ரூபாய் தாண்டி விடுகிறது. அதனால் அபராதம் கட்ட தேவையில்லை.

இவ்வாறு இதில் உள்ள சில நெளிவு, சுளிவுகளை பயன்படுத்தினால் மினிமம் பேலன்ஸ் அபராதத்தை தவிர்க்கலாம்.

எப்பொழுதும் இப்படி கணக்கு பார்த்து மண்டையை குழப்ப அவசியமில்லை தான். அதற்கு பதிலாக குறைந்த பட்சம் 5,௦௦௦ ரூபாய் வைத்துக் கொள்வது தேவையில்லாத தலைவலி கொடுக்காமல் இருக்கும்.

ஆனாலும் அவசர தேவை காலங்களில் அந்த ஐயாயிரம் ரூபாயை எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் இந்த முறைகளை தெரிந்து வைத்து இருப்பது உதவியாக இருக்கும்.

தொடர்புடைய கட்டுரைகள்:
பிக்ஸ்ட் டெபாசிட் செய்யும் போது வரியை தவிர்ப்பது எப்படி?



« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக