அதிக பாதுகாப்பான முதலீடை தேடுபவர்களுக்கு நிறுவனங்கள் வழங்கும் கடன் பத்திரங்களும் ஒரு நல்ல வாய்ப்பு என்று ஏற்கனவே எழுதி இருந்தோம்.
பார்க்க: பதற்றமான சந்தை நிலவரத்தில் பாதுகாப்பு தரும் பாண்ட்கள்
அந்த வரிசையில் NTPC, PFC போன்ற அரசு நிறுவனங்களின் பத்திரங்களையும் பரிந்துரை செய்து இருந்தோம்.
பொதுவாக இந்த கடன் பத்திரங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் தான் வெளியிடப்படுவதுண்டு. அதனால் மேலே சொன்ன கடன் பத்திரங்களை தவறியவர்கள் REC கடன் பத்திரங்களில் முதலீடு செய்யலாம்.
REC என்பதன விரிவாக்கம் Rural Electrification Corporation. இது ஒரு மத்திய அரசு நிறுவனம். கிராமப்புறங்களுக்கு மின்சார விரிவாக்கம் தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருகிறது. நிதி நிலைமையும் நன்றாக உள்ளது.
நிதி நிறுவனங்களின் தர வரிசையில் AAA/Stable என்ற தரத்தை பெற்றுள்ளது. இது நல்ல நிலையில் உள்ள நிறுவனத்தை குறிப்பிடுவதாகும்.
இந்த நிறுவனம் 700 கோடி ரூபாயை கடன் பத்திரங்களில் திரட்ட உள்ளது. 10, 15, 20 வருடங்களுக்கு முதலீடு செய்யலாம். அதற்கேற்ப 7.14%, 7.34% மற்றும் 7.43% வருட வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
5000 முதல் பத்து லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்து கொள்ளலாம்.
வருமான வரி விலக்கு சலுகையும் கிடைப்பதால் 20%, 30% வரி கட்டுபவர்களுக்கு வரி சலுகையுடன் சேர்த்து வருடத்திற்கு 10% அளவு வட்டி பலன் கிடைக்கும். அதனால் அதிக வருமான வரி கட்டுபவர்களுக்கு மட்டுமே இந்தக் கடன் பத்திரங்கள் நன்கு பொருந்தும். மற்றவர்கள் தவிர்த்து விடலாம்.
அக்டோபர் 7 முதல் நவம்பர் 4 வரை இந்த கடன் பத்திரங்களுக்கு விண்ணப்பிக்கலாம். முதலில் விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே இந்த கடன் பத்திரங்கள் கிடைக்கும்.
பங்குசந்தையை விட பாதுகாப்பான முதலீடு தேடுபவர்கள் இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
தொடர்பான கட்டுரைகள்:

- அதிக பாதுகாப்பு தரும் NTPC வரி விலக்கு முதலீடு பத்திரம்
- வரி விலக்கு தரும் PFC அரசு நிறுவன கடன் பத்திரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக