செவ்வாய், 24 மார்ச், 2015

இந்தியாவில் சொந்தமாக டெலிவரி செய்யும் அமேசான்

உலக அளவில் இ-காமெர்ஸ் துறையில் புகழ் பெற்று விளங்கும் அமேசான் இந்தியாவில் அந்த அளவு ஜொலிக்க முடியவில்லை.


பத்து வருடங்களுக்கு முன்னரே அமேசான் இந்தியாவில் நுழைந்து ஆன்லைன் வர்த்தகம் செய்ய ஆரம்பித்தது.

ஆனால் இந்தியாவில் உள்ள கட்டமைப்பு சூழ்நிலைகள் அவர்களுக்கு சாதகமில்லாததால் வந்த வேகத்தில் சென்று விட்டனர்.அதன் பிறகு பிளிப்கார்ட் போன்ற உள்நாட்டு நிறுவனங்கள் வெற்றி அடைந்த பிறகே ஒரு நம்பிக்கை கொண்டு இந்தியாவிற்கு வந்தார்கள்.

ஆனாலும் இன்னும் உள்நாட்டு நிறுவனங்களான பிளிப்கார்ட் (Flipkart), ஸ்னேப்டீல் (Snapdeal) போன்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் பின்தங்கியே உள்ளது.

பிளிப்கார்ட் போன்றவை ஆர்டர் செய்த அன்றே டெலிவரி செய்யும் போது அமேசான் பொருட்கள் 10 நாள் வரை ஆகிறது என்பது மறுக்க முடியாது.

இதற்கு முக்கிய காரணமே அவர்களின் டெலிவரி சர்வீஸ் இந்தியா முழுவதும் பரவலாக இல்லை என்பது தான்.

இது போக, தனது டெலிவரிக்கு Bluedart, Gati போன்ற மற்ற கொரியர் நிறுவனங்களையும் சார்ந்து இருக்கிறது. இதனால் உரிய நேரத்திற்கும் செல்ல முடியவில்லை.

அதே நேரத்தில் டெலிவரி சர்வீசை கண்காணிப்பதிலும் பிரச்னை உள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு புதிய டெலிவரி நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்கள். இந்த நிறுவனம் சொந்தமாகவே அமேசான் பொருட்களை டெலிவரி செய்யும்.

இதற்கு EasyShip என்று பெயரிட்டு உள்ளார்கள். Amazon Transportation Services Private Limited (ATSL) என்றநிறுவனத்தின் கீழ் டெலிவரி சேவை இயங்கும்.

அமேசானை பொறுத்தவரை இந்திய ஆன்லைன் சந்தை துறையில் இந்த முயற்சி ஒரு நல்ல திருப்பு முனையாக அமைய வாய்ப்பு இருக்கிறது. Flipkart, Snapdeal போன்றவற்றிற்கு கடுமையான போட்டியை தரவும் வாய்ப்பு உள்ளது.

புதிதாக இ-காமெர்ஸ் துறையில் வருபவர்கள் பெரிய நிறுவனங்களின் இத்தகைய நடவடிக்கைகளை கண்காணித்து வருவது நல்ல பலனைத் தரும்.

தொடர்புடைய பதிவுகள்:

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக