திங்கள், 16 மார்ச், 2015

உயர முடியாத சந்தையில் உள்ளிருந்து என்ன செய்வது?

கடந்த சில நாட்களாக நிறைய மின் அஞ்சல்கள் சந்தையின் நிலையை பற்றி வந்து கொண்டே இருக்கின்றன.


சந்தையில் இது கரெக்ட்சனா? இன்னும் கீழே சரியுமா? மேலே உயர வாய்ப்புகள் உள்ளதா? என்பது தான் மெயில்களில் வரும் கேள்வி. பொதுவான கேள்வி என்பதால் இந்த பதிவில் தொடர்கிறோம்.சந்தை மேலே உயரும் போது மகிழ்ச்சியில் திளைப்பதும், கீழே வரும் போது அதிக பதற்றப்படுவதையும் சிறு முதலீட்டாளர்கள் கொண்டு இருப்பது வழக்கமான செயல் தான். இதனை நாம் ஒவ்வொருவரும் அனுபவித்து தான் மேல் வந்திருப்போம்.

தற்போதைய சந்தை நிலைமைக்கு இரண்டு முக்கிய காரணிகளை கருதலாம். இரண்டுமே அமெரிக்காவால் தான்.

ஒன்று, அமெரிக்கா அடைந்து இருக்கும் நல்ல வளர்ச்சி காரணமாக வட்டி விகிதங்கள் கூட வாய்ப்புள்ளது. இதனால் நிறைய நமது அந்நிய முதலீடுகள் நம்மை விட்டு சென்று விடலாம் என்ற ஒரு அச்சம்.

இது தொடர்பான மேலும் விவரங்களை எமது கடந்த வார இந்த பதிவில் பார்க்கலாம்.

இரண்டாவது, ரூபாய் மதிப்பு கீழே சென்று கொண்டிருப்பது. இதனை ரூபாய் கீழே செல்கிறது என்று சொல்வதை விட டாலர் மிகவும் வலுமையாக சென்று கொண்டிருக்கிறது என்றும் சொல்லலாம்.

இந்த நாணய பாதிப்பு உலகின் பல நாடுகளில் ஏற்பட்டுள்ளது என்பதையும் கவனிக்க. ஐரோப்பாவில் யூரோ மதிப்பு நமது ரூபாயை விட மோசமாக இருக்கும் சூழ்நிலை தான் நிலவி வருகிறது.

இந்த இரண்டு காரணங்களை தவிர உள்நாட்டில் அவ்வளவு பெரிய எதிர்மறை காரணிகள் தென்படவில்லை. உலக அளவிலும் அவ்வளவு மோசமில்லை என்று தான் நினைக்கிறோம்.

IMF, உலக வங்கிகள் எல்லாம் இந்தியாவை பற்றி கூறி வரும் மிக வலுவான நேர்மறை விடயங்களையும் கவனிக்கவும். இவைகள் ஒன்றும் நமது அரசியல்வாதிகள் போல் ஏனோ தானாவென்று அறிக்கைகள் கொடுக்கும் நிறுவனங்கள் அல்ல.

சந்தை உயரும் போது அவசரத்தில் ஏதாவது ஒரு பங்கில் முதலீடு செய்வதை விட, தற்போதைய நேரம் பொறுமையாக இருந்து நல்ல பங்குகளை தேர்ந்தெடுக்க வாய்ப்புகளை வழங்கியுள்ளது.

இந்த சூழ்நிலையை பயன்படுத்தி நாம் தேர்வு செய்த பங்குகளில் முதலீடுகளை அதிகரிப்பது தான் தற்போதைக்கு சரியான செயலாக இருக்கும்.

அதனால் முதலீட்டாளர்கள் அச்சம் தவிர் என்று அடுத்த கட்டத்திற்கு செல்லலாம்.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

1 கருத்து: