சனி, 14 மார்ச், 2015

மோடியால் பாதுகாப்பு துறை நிறுவனங்களுக்கு கடும் டிமேண்ட்

மோடியின் Make in India என்ற வாக்கியம் பரவலமாக பிரபலமடைந்து உள்ளது அறிந்ததே. அந்த திட்டத்தில் முதல் வரிசையில் இருப்பது ராணுவம், கப்பல், விமான படை சார்ந்த பாதுகாப்பு நிறுவனங்கள்.


ஏனென்றால், உலக அளவில் இந்தியா தான் அதிக அளவு பாதுகாப்பு உபகரணங்களை இறக்குமதி செய்து வருகிறது. இது ஒரு விதத்தில் அந்நிய செலாவணி பற்றாக்குறைக்கும் காரணமாக அமைந்து விடுகிறது.



வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய பொறியாளர்களை வைத்து உபகரணங்களை செய்து மீண்டும் இந்தியாவிற்கே விற்கும் வேடிக்கையும் நடந்து வருகிறது.

இது வரை பாதுகாப்பு என்றே ஒரே காரணத்தால் அரசு நிறுவனங்கள் மட்டுமே அதிக அளவில் அனுமதிக்கப்பட்டன. ஆனால் HAL, DRDO போன்றனவை வேலை செய்து வரும் வேகத்தை பார்த்தால் நாம் குறைந்தது ஒரு தலைமுறையாவது பின் தங்க வாய்ப்பு உள்ளது.

தற்போது ஓரளவு அந்த நிலைமை மாற வாய்ப்பு உள்ளது போல் தெரிகிறது.

இதனால் தொழில்நுட்பம் முதலில் நமது கைக்கு வந்து சேர வேண்டும். இதனால் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுடன் சேர்ந்து வேலை பார்க்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. கொஞ்சம் கற்றுக் கொண்ட பிறகு சொந்த காலிலே நிற்க முயற்சிக்கலாம்.

இது கிட்டத்தட்ட சாம்சங், LG போன்ற நிறுவனங்கள் சோனி, பிலிப்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டு எலக்ட்ரானிக்ஸ் சந்தையை பிடித்த முறை போன்று தான்.

இந்த நிலையில் தான் எண்ணிக்கையில் குறைவான உள்நாட்டு பாதுகாப்பு துறை சார்ந்த நிறுவனங்கள் கடும் டிமேண்ட்டில் உள்ளன.

அவைகளை வாங்குவதற்கு காசினை குவித்து வைத்துள்ள ரிலையன்ஸ், டாடா, மஹிந்திரா, ஹீரோ போன்ற பெரிய நிறுவனங்கள் வலைகளை வீசி உள்ளன.

அதில் தான் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் Pipavav என்ற கப்பல்கள் கட்டும் நிறுவனம் சிக்கி உள்ளது. Pipavav நிறுவனம் நீர்மூழ்கி கப்பல்களில் நிபுணத்துவம் பெற்றவர்கள். கிட்டத்தட்ட 2000 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி உள்ளார்கள்

கடைந்தெடுத்த காரியக்காரர்களான ரிலையன்ஸ் ஒன்றில் முதலீடு செய்வது என்றால் விஷயம் இல்லாமல் இருக்காது.

அதனால் இந்த வரிசையில் இன்னும் நிறைய டீல்கள் அமைய பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. நமது போர்ட்போலியோவில் உள்ள ஒரு நிறுவனமும் வாங்கப்படலாம் என்று யூகிக்கிறோம்.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக