வியாழன், 26 மார்ச், 2015

பதற்றப்படாமல் பங்குச்சந்தையை அணுகுக..

இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் தற்போது  27,500 புள்ளிகளுக்கும் கீழ் வந்த விட்டது.


நமது போர்ட்போலியோவை வாங்கியவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு இருக்காது என்று நம்புகிறோம்.



சில மின் அஞ்சல்கள் வருகின்றன். சந்தை குறைந்து விட்டது. பங்குகளை விற்று விடலாமா? என்பது தான் பிரதான கேள்வி..

கரடியின் பிடியில் இருக்கும் சந்தையில் பங்குகளை விற்க கூடாது என்பதை முதல் பால பாடமாக எடுத்துக் கொள்ளலாம்.

கடன் வாங்கிய பணத்தையோ, அவசர தேவைக்கான பணத்தையோ பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டாம் என்று பல முறை எழுதி இருக்கிறோம்.

அவ்வாறு எமது வாசகர்கள் முதலீடு செய்து இருக்க மாட்டார்கள் என்றும் நம்புகிறோம். அதனால் பதற்றப்படவும் தேவையில்லை.

அதை எல்லாம் விட, பதற்றப்பட வேண்டிய அவசியமும் வரவில்லை.

உலக வங்கி இந்தியாவை பற்றி நன்றாக சொல்கிறது. ஆசியா வங்கி அதை விட பெரிதாக சொல்கிறது. இங்கு வேறு மோசமான நிகழ்வுகளும் நடந்து விடவில்லை. அதனால் அடிப்படை என்பது வலுவாகவே உள்ளது.

அமெரிக்கா சந்தை வலுவாக மாறுகிறது. டாலர் மதிப்பு கூடுகிறது. அதனால் FII என்று சொல்லப்படும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கொஞ்சம் முதலீட்டை எடுத்துக் கொண்டு சென்று உள்ளார்கள். இது தான் சரிவிற்கு முக்கிய காரணம்.

ஆனாலும் இன்னும் வளரும் சந்தைகளில் இந்தியா தான் முக்கிய இடத்தில் உள்ளது என்பதையும் கவனிக்க. அதனால் போனதெல்லாம் வராமல் போகாது.

இரண்டாவதாக, Options போன்ற குறுகிய கால வர்த்தகர்கள் மாதக் கடைசி என்பதால் சந்தையை மேலும் கீழே இறக்கி உள்ளார்கள்.

இப்படி கூட்டி கழித்து பார்த்தால் எல்லாம் தற்காலிக நிகழ்வுகளே.

இதில் நீண்ட கால முதலீட்டாளர்கள் அதிக அளவு  குழம்பிக் கொள்ள வேண்டாம்.

ரொம்ப டென்ஷன் போல் இருந்தால் 'தண்ணில கண்டம்' என்று ஒரு திரைப்படம் வந்துள்ளது. போய் பாருங்க..நல்ல சிரித்து ரிலேக்ஸ் பண்ணலாம்.

தனிப்பட்ட கணிப்பு படி, அடுத்த நான்கு வருடங்களில் நமது பங்கு முதலீடு இன்னொரு மடங்காக மாறுவதற்கு தற்போது வாங்கினால் சரியாக இருக்கும்.

எமது ஏப்ரல் மாத போர்ட்போலியோவை ஏப்ரல் 11 அன்று வெளியிடுகிறோம்.

சந்தை இறக்கத்தில் இருப்பதால் இடைப்பட்ட இடைவெளியில் வேண்டும் என்றாலும் Customized Portfolio முறையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

1 கருத்து:

  1. சரியா சொன்னிங்க.. ஆப்ஷன் செய்யுறவங்க விளையாட்டால்தான் கடந்த வியாழனற்று நிப்டி 200 புள்ளிகளை இழந்தது..

    பதிலளிநீக்கு