செவ்வாய், 10 மார்ச், 2015

Adlabs IPOவை வாங்கலாமா?

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு IPO நிகழ்வை சந்தையில் பார்க்க முடிகிறது. இந்த முறை சந்தைக்கு வருவது Adlabs Entertainment என்ற நிறுவனம்.


நேற்று முதல் IPOவிற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. நாளையுடன் முடிகிறது.  (March 10~12)Adlabs நிறுவனம் தீம் பார்க் மற்றும் ஹோட்டல் துறையில் இருக்கும் நிறுவனம். இதன் பகுதி வியாபரத்தன்மை Wonderla நிறுவனத்துடன் ஒத்து போகிறது.

தற்போதைய  IPOவில் ஒரு பங்கு 221~230 ரூபாய் என்ற வரம்பிற்குள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நிறுவனம் தொடர்ந்து நஷ்டங்களை தந்து வருவதால் P/E முறையில் மதிப்பிடுவது ஒத்து வராது.

நிறுவனம் அதிக அளவில் கடன் சுமையில் சிக்கி உள்ளது. இந்த IPO மூலம் கிடைக்கப்பெறும் 450 கோடி ரூபாய் பணம் கடனை திருப்பி செலுத்த பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் போக 600 கோடி ரூபாய் கடன் இருக்கும் என்று தெரிகிறது.

பொழுதுபோக்கு பூங்கா வியாபாரத்தில் அண்மையில் தான் நிறுவனம் அடி எடுத்து வைத்து உள்ளது. ஏற்கனவே லாபம் சம்பாதித்து நல்ல முறையில் இயங்கி வரும் Wonderla போன்றவற்றுடன் Adlabs எந்த அளவு போட்டியிட முடியும் என்பதில் ஐயம் உள்ளது.

கடந்த ஆண்டு 120 ரூபாயில் இருந்த பங்கு விலை தற்போது 230 ரூபாயாக மாறும் அளவிற்கு நிறுவனத்தில்  வளர்ச்சி காரணிகள் இருந்ததாகவும் தெரியவில்லை.

இதனால் கடனை அடைத்து Adlabs நல்ல முறையில் இயங்க 3~5 ஆண்டுகள் தேவைப்படும். அதன் பிறகு தான் விரிவாக்க பணிகளை மேற்கொள்ள முடியும்  என்ற சூழ்நிலையில் நாம் இந்த IPOவை தவிர்ப்பதே நல்லது.

எமது மார்ச் கட்டண போர்ட்போலியோ மார்ச் 14 அன்று வெளிவருகிறது. விரும்பும் நண்பர்கள் இணைந்து கொள்ளலாம். மின் அஞ்சல் முகவரி: muthaleedu@gmail.com

தொடர்புடைய பதிவுகள்:« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக