செவ்வாய், 31 மார்ச், 2015

இனி சுயதொழில் செய்பவர்கள் பங்குச்சந்தையில் பணம் திரட்டலாம்

இதுவரை இந்திய பங்குச்சந்தையில் ஒரு நிறுவனம் இடம் பெற வேண்டும் என்றால் குறைந்த பட்சம் நிறுவனத்தின் மதிப்பு ஒரு கோடிரூபாய்  என்று இருக்க வேண்டும்.


அப்படி இருந்தால் தான் IPO என்ற முறையில் வெளிவந்து பங்கு முதலீட்டாளர்களிடம் பணம் பெற முடியும்.

இதில் ஒரு கோடி என்பது சுய தொழிலாக சிறு நிறுவனம் ஒன்றை ஆரம்பிப்பவர்களுக்கு இன்றும் பெரிய தொகை தான்.



எழு வருடங்கள் முன் ஆரம்பிக்கப்பட்ட ப்ளிப்கார்ட் வெறும் நான்கு லட்ச ரூபாய் முதலீட்டில் தான் ஆரம்பிக்கப்பட்டது என்பதையும் நினைவில் கொள்க.

பார்க்க: இளைஞர்களுக்கு நம்பிக்கை தரும் ப்ளிப்கார்ட் வெற்றி

இவ்வாறான சிறு நிறுவனங்கள் ஆரம்பிக்கும் போது முதலில் வங்கிகளை நோக்கி தான் ஓட வேண்டும். அப்படி கஷ்டப்பட்டு கடன்களை பெற்றாலும் வட்டியிலே ஆரம்ப கட்ட வருமானம் சென்று விடும்.


மற்றொரு வழியாக Venture Capital என்பது மூலம் பணம் திரட்டப்பட்டது. ஆனால் ஒரு வித நிலையான நிலைக்கு நிறுவனம் வரும் வரை Venture Capital மூலம் பணம் பெறுவது என்பது எளிதல்ல.

இது போக, வெளிப்படை தன்மை என்பது இங்கு மிகவும் குறைவு. புரோக்கர்கள் துணையில்லாது Venture முதலீடுகளை பெறுவது என்பது கடினமான ஒன்றாகவே இருந்து வந்தது.

இந்த சூழ்நிலையில் தான் செபி சிறு, குறு நிறுவனங்களுக்கான பங்குச்சந்தை ஒன்றை திறந்துள்ளது. இதற்கு Alternative Capital Raising Platform என்று பெயர் கொடுத்து உள்ளார்கள்.

இதன் மூலம் 10 லட்ச ரூபாய் முதல் முதலீடுகளை திரட்டிக் கொள்ளலாம். இதற்கு நிபந்தனையாக 20% பங்குகளை பங்குச்சந்தைக்கு மூன்று வருடம் Lock-in முறையில் கொடுக்க வேண்டும்.

தங்களுடைய புதிய திட்டங்கள், வளர்ச்சிக்கான முறைகள் போன்றவற்றை விவரமாக பங்குச்சந்தையில் சமர்பிக்க வேண்டும். அதனை பார்த்து விரும்பும் நிறுவனங்கள் தொடர்பு கொள்ளும்.

கருத்து கேட்கும் நிலையில் இருக்கும் இந்த முறை இன்னும் செயலாக்கமாக சில மாதங்கள் ஆகலாம். வெளிப்படையாக முதலீடுகள் திரட்டுவதற்கு இந்த முறை பயனாக இருக்கும்.

நிதி அறிக்கைகள், செயல் திறன் விவரங்கள் போன்றவற்றை இல்லாத நிலையில் சிறு முதலீட்டாளர்கள் இந்த நிறுவனங்களில் முதலீடு செய்தால் ரிஸ்க் அதிகமாக இருக்கும்.  அதனால் சிறு முதலீட்டளர்கள் முதலீடு செய்ய அனுமதி இல்லை.

இந்த முறையில் FII, QIB போன்ற பெரிய அளவிலான முதலீட்டாளர்களே அனுமதிக்கப்படுவர்.

தற்போதைக்கு மென்பொருள் நிறுவனங்கள், ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள், மற்றும் புதிய ஐடியாக்களை வைத்துள்ள நிறுவனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர்.

சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ஏற்கனவே இருக்கும் இந்த முதலீட்டு முறை நம் நாட்டிலும் வரவிருப்பது வரவேற்கதக்க ஒன்றாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை பார்க்க..
http://www.sebi.gov.in/cms/sebi_data/attachdocs/1427713523817.pdf



தொடர்பான பதிவுகள்:

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

1 கருத்து: