புதன், 25 மார்ச், 2015

அதிக நிலையான வருமானம் கொடுக்கும் NCD பத்திரங்கள்

இந்த பதிவு எழுதுவதற்கு வேண்டுகோள் விடுத்த ராதா அவர்களுக்கு நன்றி!


பொதுவாக நிலையான வருமானம் கொடுப்பவை என்றால் வங்கிகளின் வைப்பு நிதி (Fixed Deposit) தான் நியாபகம் வரும். அடுத்து அரசின் பல பத்திரங்கள் நினைவுக்கு வரும்.

இது போக, தனியார் நிறுவனங்களும் நிலையான வருமானம் கொடுக்கும் பத்திரங்களை வெளியிட்டு வருகின்றன.

இதில் ஒரு வித பத்திரம் தான் Non Convertible Debentures (NCD).



பொதுவாக நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பணத்தினை பெற வங்கிகளை நாடும். ஆனால் வணிக அளவிலான வட்டி என்பது வங்கிகளில் கொஞ்சம் அதிகமே.


அதனால் நிறுவனங்கள் வங்கிகளுக்கு பதிலாக மக்களிடம் பணத்தை பெற்று தங்கள் வியாபாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ள சில வழிமுறைகள் உள்ளன.

முதல் வழிமுறை,

Convertible Debentures என்ற பெயரில் பத்திரங்கள் வெளியிடுவார்கள். ஒரு குறிப்பிட்ட காலம் வரை நிலையான வட்டியை அளித்து அதன் பிறகு நிறுவன பங்குகளாக மாற்றி விடும் நடைமுறை இது.

பங்குச்சந்தையிலே எளிதில் பங்கு வாங்கும் நடைமுறைகள் இருப்பதால் தனி நபர்களுக்கு இது ஒத்து வராது.

அதனால் இரண்டாவது வழியை யோசிக்கலாம்.

இதன் பெயர் தான்  Non Convertible Debentures (NCD).

இதில் பெறப்படும் பணத்திற்கு நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை வட்டி வழங்கும். இந்த வட்டி விகிதம் வங்கி வட்டி விகிதங்களை விட இரண்டு முதல் மூன்று சதவீதங்கள் அதிகமாக இருக்கும். இறுதியில் பணம் திருப்பி அளிக்கப்பட்டு விடும். பங்குகளாக மாற்றப்படாது.




இனி ஒரு நிறுவனத்திடம் பணத்தைக் கொடுக்கும் போது எவ்வளவு பாதுகாப்பு என்ற கேள்வி இயல்பாக எழும்.

பொதுவாக இந்த பத்திரங்கள் RBIயின் அனுமதியோடு தான் வருகின்றன. அதனால் பங்குகளை  விட ஓரளவு பாதுகாப்பு உத்தரவாதம் செய்யப்பட்டது.

விதி முறைகளின் படி, ஒவ்வொரு நிறுவனமும்  CRISIL போன்ற நிதி நிறுவனங்களின் தர வரிசையை பெற்றிருக்க வேண்டும். இந்த தர வரிசையை சரி பார்த்து நிறுவனத்தின் நிதி நிலையை அறிந்து கொள்ளலாம்.

அதே நேரத்தில் NCD பத்திரங்களிலே இரண்டு வகை உள்ளது.

முதல் வகை Secured NCD பத்திரங்கள். இதில் நிறுவனம் திவாலாகும் நிலை வந்தால் முதலில் சொத்துக்கள் விற்கப்பட்டு  Secured NCD பத்திரங்கள் வாங்கியவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

இரண்டாவது Unsecured NCD பத்திரங்கள். இதில் நிறுவனம் திவாலாகும் நிலை வந்தால் மற்றவங்களுக்கு கொடுத்து போக மீதி உள்ளதை மட்டும் பிரித்து நமக்கு தருவார்கள்.

ஆதலால் Secured NCD பத்திரங்கள் அதிக அளவு பாதுகாப்பானவை.

இந்த பத்திரங்களில் கிடைக்கும் வருமானங்களுக்கு வரி விலக்கு எதுவும் இல்லை என்பது ஒரு பெரிய குறை.

பொருளாதாரம் சுணக்கத்தில் இருக்கும் போது இந்த பத்திர முதலீடுகள் பயனுள்ளவையாக இருக்கும்.

நிறுவனங்களை நீண்ட காலத்திற்கு நம்ப முடியாததால் முதலீடு காலத்தை ஐந்து வருடங்களுக்குள் வைத்து இருப்பது நன்றாக இருக்கும்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

2 கருத்துகள்:

  1. பங்குகள் வீழ்ச்சியில் இருக்கும்போது, பங்குகளை வாங்குவதுதானே நம் பணத்தைப் பெருக்குவதற்கான வழியாக இருக்க முடியும். பங்குகள் மிகவும் உச்சத்தில் இருக்கும்போது, நம் பணத்தைப் பங்குகளில் போட முடியாது. அந்த நேரத்தில்தானே, பணத்தை NCD பத்திரங்களில் முதலீடு செய்வது நமக்கு நல்லது.

    பதிலளிநீக்கு
  2. பங்குகள் வீழ்ச்சி என்ற வார்த்தையை விட பொருளாதார சுணக்கம் என்பது நன்கு பொருந்தும். வளர்ச்சி குறைவாக இருந்து பணவீக்கம் அதிகமாக இருக்கும் போது வெளியில் உள்ள வட்டி பங்குச்சந்தை வருமானத்தை விட அதிகமாக் இருக்கும். அந்த சமயங்களில் NCD பத்திரங்கள் நல்ல பலன் தரும்.

    பதிலளிநீக்கு