வியாழன், 5 மார்ச், 2015

தூய்மை இந்தியாவால் டைல்ஸ் நிறுவனங்கள் ஜொலிக்கின்றன

சில சமயங்களில் பங்குச்சந்தைகளில் சுவராஸ்யமானவைகள் நடக்கும். அதில் ஒன்று தான் இன்றைய கட்டுரை.


மோடி அவர்கள் தூய்மை இந்தியா திட்டத்தினை ஈடுபாடு காட்டிய போது நல்ல ரெஸ்பான்ஸ்.

நடிகர்கள், நடிகைகள் அவர்கள் வீட்டை கூட அவர்கள் சுத்தம் செய்வார்களா என்று தெரியாது. ஆனால் தெருவை சுத்தம் செய்ய கிளம்பி விட்டார்கள்.

தூய்மை இந்தியாவின் கனவு டாய்லெட்


மிதமிஞ்சிய விளம்பரம் போல் தான் தெரிந்தது. ஆனாலும் சுத்தமாகிறது என்ற நல்லது நடந்தால் நன்மைக்கே என்று விட்டு விடுவோம்.

மோடி அழுத்தம் கொடுக்கிறார் என்றவுடனே பட்ஜெட்டில் கண்டிப்பாக நிதி ஒதுக்கப்படும் என்று சந்தையில் பலத்த எதிர்பார்ப்பு இருந்தது..

அது வீண்போகவில்லை...

ரயில்வே அமைச்சர் ட்ரெயினில் பயோ-டாய்லெட் வைக்கப்படும் என்று அறிவித்தார். ரயில் நிலையங்களில் டாய்லெட் காட்டப்படும் என்று அறிவித்தார்.

இது போக பொது பட்ஜெட்டில் ஜெட்லி ஆறு கோடி டாய்லெட்டுகள் கட்டப்படும் என்று அறிவித்தார்.

ஆக, இனி  டாய்லெட் மாயம் தான். ஒதுங்குவதற்கு இனி இடம் தேட வேண்டாம்:)

இதனை மோப்பம் பிடித்த பங்கு சந்தைக்காரர்கள் இனி டைல்ஸ் இல்லாமல் டாய்லெட் இல்லை என்ற அதீத நம்பிக்கையோடு டைல்ஸ் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் முதலீடு செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் டைல்ஸ் பங்குகள் 15% உயர்ந்துள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்..

Company Name Price change % Change
Aro Granite 64 2.65
Asian Granito 117.1 1.39
Cera Sanitary 2660 3.76
Euro Ceramics 4.48 4.92
HSIL 420 1.54
Kajaria Ceramic 815 0.23
Madhav Marbles 47.35 2.38
Nitco 22 11.11
Somany Ceramics 372 1.09

    பட்ஜெட் தினமன்று டைல்ஸ் பங்குகள்


இதில் கடந்த வருடத்தில் நமது கட்டண போர்ட்போலியோவில் உள்ள ஒரு பங்கும் இருந்தது என்பது மகிழ்வான செய்தி.

ஆனால் டாய்லெட்டை நினைத்து நாம் அந்த பங்கை பரிந்துரை செய்யவில்லை. நிறுவன அடிப்படைகளை மட்டும் வைத்து தான் பரிந்துரை செய்தோம். அதனால் இதில் பலனடைந்தவர்கள் 'முதலீடை' போற்றாமல் மோடிக்கு நன்றி செலுத்துக!

பங்குசந்தையில் சூழ்நிலையை அறிந்து முதலீடு செய்பவர்களுக்கு தோல்வி என்பது அரிதானதே.

பன்றி காய்ச்சல் வந்தால் தமிப்ளு மாத்திரைகளை உற்பத்தி செய்பவர்களிடம் முதலீடு செய்யலாம். மக்கள் திடமாக இருந்தால் வொண்டெர்லாவில்   முதலீடு செய்யலாம். அவர்களை பொறுத்தவரை எல்லாம் நன்மைக்கே!

எமது அடுத்த போர்ட்போலியோ மார்ச் 14 அன்று வெளிவருகிறது. விரும்பும் நண்பர்கள் muthaleedu@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இந்த இணைப்பையும் பார்க்கலாம்.

தொடர்புடைய பதிவுகள்:

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக