திங்கள், 9 மார்ச், 2015

யுஎஸ்க்கு நெறி கட்டினால் இந்தியா இரும வேண்டும்

நேற்றைய சந்தை எப்படி இருக்கும் என்பதை கொஞ்சம் முன்னரே நிபுனர்கள் கணித்து விட்டனர். அதற்கு அமெரிக்கா ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.


கடந்த வாரம் வெளியான அமெரிக்கா வேலை வாய்ப்புகள் தொடர்பான தரவுகள் நல்ல முன்னேற்றத்தைக் கொடுத்து இருந்தன. ஊதியங்களில் கூட ஓரளவு வளர்ச்சியைக் காண முடிந்தது.



இது போக அமெரிக்க டாலரும் பத்து வருடங்களில் இல்லாத அளவு வலுவான வளர்ச்சியைக் கொடுத்து இருந்தது.

இதனால் அமெரிக்காவிற்கு சந்தோசம். மற்ற நாடுகளுக்கு பதற்றம். பொறாமையால் அல்ல:)

கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்க பொருளாதாரம் வளர வேண்டும் என்ற ஆசையில் அங்குள்ள மத்திய வங்கி வட்டி விகிதங்களை கணிசமாக குறைத்து இருந்தது.

இதனால் மக்களிடம் பணப்புழக்கம் அதிகமாகி கொஞ்சம் பொருளாதாரமும் சீரடைந்தது..

தற்போது வளர்ச்சி நன்றாக செல்கிறது என்று தெரிந்தவுடன் இனியும் வட்டி விகிதத்தை குறைத்து வைப்பது நல்லதல்ல. குமிழாக மாறி வெடித்து விடும்.

இதனால் விரைவில் அமெரிக்க வட்டி விகிதம் அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு அதிகரிக்கப்படும் போது  அமெரிக்காவின் கடன் பத்திரங்களுக்கும் வட்டி அதிகரிக்கும். இதனால் அமெரிக்காவிற்கு வெளியே பெரிதளவு முதலீடு செய்த நிறுவனங்கள் தங்கள் பணத்தை திரும்ப பெற்று அமெரிக்காவில் முதலீடு செய்ய வாய்ப்பு உள்ளது.

அவ்வாறு முதலீடுகள் வெளியே போகும் சூழ்நிலையில் மற்ற நாடுகளின் பங்குசந்தையில் வீழ்ச்சிகள் ஏற்படுகிறது.

இதனால் அமெரிக்கா சிரிச்சாலும் நமக்கு பிரச்சனை தான். அழுதாலும் பிரச்சனை தான்.

இந்திய சந்தை இந்த காரணிகளை விட வலுவாக உள்ளதால் தப்பி விடும் என்றே எண்ணுகிறோம். அதனால் வீழ்ச்சிகளை வாங்கும் வாய்ப்புகளாக மாற்றிக் கொள்ளுங்கள்!


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக