செவ்வாய், 3 மார்ச், 2015

பட்ஜெட்டிற்கு பிறகு பங்குச்சந்தையை எப்படி அணுகலாம்?

கடந்த மாதத்தில் எழுதிய ஒரு கட்டுரையில் இந்திய பொருளாதார முன்னேற்றத்தின் மீது ஒரு தெளிவு இல்லாததால் கொஞ்சம் காத்து இருக்குமாறு சொல்லி இருந்தோம். அதனால் தான் பிப்ரவரி போர்ட்போலியோவை கூட தவிர்த்து இருந்தோம்.


தற்போது அந்த சூழ்நிலை ஓரளவு மாறி வருவதையும் காண முடிகிறது.



பட்ஜெட்டிற்கு முன் தாக்கல் செய்யப்பட நிதி ஆய்வு அறிக்கை GDP வளர்ச்சியை 7% தாண்டியும் எதிர்பார்க்கலாம் என்று கூறியுள்ளது. அதே போல் நிதி பற்றாக்குறையும் 4% என்ற அளவிலே இருந்தது.

அதனால் தான் 10% நிதியை அதிகமாக மாநிலங்களுக்கு கொடுத்த பிறகும் கூட அருண் ஜெட்லியால் கடந்த வருடத்திற்கு குறைவு இல்லாமல் திட்டங்களில் நிதி ஒதுக்க முடிந்தது.

இந்த தரவுகள் இந்திய சந்தையின் மீது ஒரு நல்ல நம்பிக்கையைக் கூட்டி உள்ளன என்றும் சொல்லலாம்.

இன்று ரிசர்வ் வங்கி கூட வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.25% அளவிற்கு குறைத்து உள்ளது. அத்துடன் அரசின் நிதி நிலை திருப்திகரமாக உள்ளது என்ற அறிக்கையும் கொடுத்துள்ளார்கள்.

இது போக, இடைவெளியில் வந்த பொருளாதார தரவுகள் கூட திருப்தியைக் கொடுத்துள்ளன.

ரியல் எஸ்டேட் துறை சுணக்கமாக இருப்பது தான் இன்னும் ஒரு எதிர்மறை விடயமாக பார்க்கப்படுகிறது.

இந்த வட்டிக் குறைப்புகள், வரி விலக்குகள் போன்றவற்றின் தாக்கம் ரியல் எஸ்டேட் துறையில் சிறிது எதிரொலித்தாலும் கூட அது சார்ந்த ஸ்டீல், இன்ஜினியரிங், எலெக்ட்ரிக்கல் பொருட்கள் சார்த்த துறைகளும் மேலே சென்று விடும். கூடவே வங்கி துறையும் மேலே வரும்.

மொத்தத்தில், பங்குச்சந்தை முதலீடுகளை தொடரலாம் என்று அனுமானிக்கவே விரும்புகிறோம்.

ஆனாலும், இந்திய சந்தை மற்ற வளரும் நாடுகளின் சந்தைகளை விட கொஞ்சம் அதிக விலையில் இருப்பதும் உண்மை தான். அதாவது பங்குகள் ஒரு வருட பிந்தைய விலையில் வர்த்தகமாகிக் கொண்டு வருகிறது என்று எடுத்துக் கொள்ளலாம்.

அதனால் மதிப்பீடலில் ஒரு சில பங்குகளே சரியான விலைக்கு கிடைக்கிறது. அதனை இனங்கண்டு முதலீடு செய்வதன் மூலம் சராசரிக்கும் அதிக லாபத்தை பெற முடியும். பார்த்து முதலீடு செய்யுங்கள்!

எமது அடுத்த போர்ட்போலியோ மார்ச் 14 அன்று வெளிவருகிறது. விரும்பும் நண்பர்கள் muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

How to approach Indian Stock Market After Budget?


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக