செவ்வாய், 3 மார்ச், 2015

பங்குச்சந்தைக்கு வரும் PF பணம்

நமது ஓய்வூதிய பணம் EPFO அலுவலகத்தால் பரமாரிக்கப்படுகிறது. இதில் கிட்டதட்ட ஐந்து லட்சம் கோடி ரூபாய் பணம் உள்ளது.


இந்த பணம் இது வரை அதிக அளவில் பாதுகாப்புடைய அரசு திட்டங்களில் மட்டுமே முதலீடு செய்யப்பட்டது.


தற்போது மத்திய அரசு இந்த பணத்தை பங்குச்சந்தைகளில் முதலீடு செய்ய அனுமதி வழங்கியுள்ளது.

ஆனால் இதற்கு 5% முதல் 15% பணம் மட்டுமே முதலீடு செய்யப்பட வேண்டும் என்று எல்லையை நிர்ணயித்துள்ளது. இதனால் 25,000 கோடி ரூபாய் பணம் PF மூலம் பங்குச்சந்தைக்குள் வரவிருக்கிறது.

இந்த பணம் ம்யூச்சல் பண்ட், அரசு பொது துறை நிறுவனங்கள் பங்குகள், LIC போன்ற வழிகளில் முதலீடு செய்யலாம் என்று தெரிகிறது.

ஒரே சமயத்தில் அனைவரும் PF பணத்தைக் கேட்க மாட்டார்கள் என்பதால் இந்த 15% எல்லை என்பது ஒரு பாதுகாப்பு எல்லையாகவே பார்க்கப்படுகிறது.

பங்குசந்தைக்கு இது ஒரு மகிழ்வான செய்தியாக அமைந்தது.

எமது அடுத்த போர்ட்போலியோ மார்ச் 14 அன்று வருகிறது. விருப்பமுள்ள நண்பர்கள் muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக