வியாழன், 12 மார்ச், 2015

வேகமாக முதலீடுகளை திரட்டும் இந்திய ரயில்வே

சிங்கப்பூர், தாய்லாந்து, கொரியா போன்ற நாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இந்த எல்லா நாடுகளிலும் ரயில்வே என்பது வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிப்பதைக் காண முடிகிறது.


ஒரு வேளை ரயில்வே வளரவில்லை என்றால் இந்த நாடுகள் இவ்வளவு முன்னேறி இருக்குமா எனபது சந்தேகமே.

அந்த அளவிற்கு வளர்ச்சியில் ரயில்வே முக்கிய பங்கு வகிக்கிறது. சாலை போக்குவரத்தில் ஆகும் செலவில் பாதி தான் ரயிலில் செலவாகிறது என்பது முக்கியமான அம்சம்.இதையே வேறு விதமாக சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவின் மிக மெதுவான வளர்ச்சிக்கும் ரயில்வேயை ஒரு காரணம் என்று சொல்லலாம்.

தாத்தா காலத்து வழித்தடங்கள், சரக்கு போக்குவரத்தை கையாள தனிப்பட்ட வழிகள் இல்லாதது, இந்த காலத்திலும் பல பகுதிகள் ரயில்வேயில் இணைக்கப்பெறாமை என்று பல காரணங்கள் தொடர்ந்து கொண்டே தான் செல்கின்றன.

ரயில்வே பட்ஜெட் என்ற ஒன்றில் கவர்ச்சியான அறிவிப்புகளை வெளியிட்டே காலத்தை தள்ளி வந்ததும் இந்த தேக்க நிலைக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம்.

இந்த நிலையில் தற்போதைய அமைச்சர் சுரேஷ் பிரபுவின் அணுகுமுறைகள் பாராட்டத்தக்கவையாக உள்ளன. அவர் ஒரு சார்டர்ட் அக்கௌன்ட் என்பதாலோ உண்மை நிலைமையை புரிந்து கொண்டு கையாளுவது நன்றாகவே உள்ளது.

கடந்த பட்ஜெட்டில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 8.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் தேவை என்று கூறி இருந்தார். ஆனால் அதனை எப்படி திரட்டுவார் என்பது ஒரு புதிராகவே இருந்தது. இந்திய ரயில்வேயை நம்பி முதலீட்டாளர்களை பெறுவது என்பது கடினமான காரியம் தான்.

அதில் முதல் படியாக LIC நிறுவனத்திடம் இருந்து 1.5 லட்சம் கோடி முதலீட்டினை பெற்றுள்ளார். அடுத்த நான்கு ஆண்டுகளில் படிப்படியாக முதலீடு செய்யப்படும் என்று தெரிகிறது.

இதற்கான வட்டி விகிதம் தொழில் முறை வட்டியில் தான் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் LIC நிறுவனத்திற்கும் பாதிப்பு ஏற்படாது. இந்த முதலீட்டுக் காலம் முப்பது ஆண்டுகள் என்று இருக்கும்.

தேவையான முதலீட்டில் 15% திரட்டியுள்ளது என்பது நம்பிக்கையைக் கொடுக்கிறது. அதே நேரத்தில் LIC எனபது அரசு நிறுவனம் என்பதால் இங்கு முதலீடை திரட்டுவது என்பது அவ்வளவு கடினமில்லாத செயல் தான்.

இது தவிர ரயில்வே சார்பில் சீனா, ஜப்பான் போன்ற சில வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் பேசி உள்ளார். முதலீடு வருகிறதோ இல்லையோ..ஆனால் முயற்சி என்பது பாராட்டத்தக்கதே. அதில் சிறு பலன் கிடைத்தால் கூட ரயில்வேக்கு நல்லது தான்.

குறைந்த லாபம் கிடைக்கும் பயணிகள் ரயில் மற்றும் வழித்தடங்களில் முதலீடு செய்ய வெளிநாட்டவர்கள் விரும்ப மாட்டார்கள்.

அந்த சூழ்நிலையில் அரசு நிறுவனம் ஒன்றும் அதிக பணத்துடன் முதலீடு செய்ய வந்திருப்பது தேவையான ஒன்றே.


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

3 கருத்துகள்:

  1. பட்ஜெட்டின் போதே நல்ல பட்ஜெட் என்று கருதினேன்

    பதிலளிநீக்கு
  2. ஆமாம் ராஜா. கவர்ச்சி இல்லாமல் உண்மை நிலையின் படி நடப்பது நல்லது தான்.

    பதிலளிநீக்கு
  3. ரயிலில் பதிமூன்று வருடங்களாக பயணிகிறேன். ஒவ்வொரு இரண்டு, மூன்று மாதத்திற்கு ஒரு முறை கண்டுப்பாக பயணம் இருக்கும். இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் பயணித்துள்ளேன். அந்த வகையில் கொஞ்ச அனுபவத்தில் கூறுகிறேன்...... வட இந்தியாவில் ஒடும் ரயிலில் 70% பேர் டிக்கட் எடுப்பதில்லை. 99.99% பேர் பிளாட்பார்ம் ரிக்கட் எடுப்பதில்லை. அவர்களுக்கு sleeper class, ac 1 tier, 2 tierஎல்லாம் ஒன்றுதான். luggage க்கு 100% பேர்டிக்கட் எடுப்பதில்லை. குறிப்பாக north east india வில் ஒடும் சில குறிப்பிட்ட பகுதிகளில் ரயிலில் டிக்கட் ஒன்று இருப்பதாக அவர்களுக்கு தெரியவில்லை. நான் அவர்களிடம் டிக்கட் எங்கு கிடைக்கும் என கேட்டால் ரொம்ப ஏளனமாக பார்கின்றனர். இதை சரி செய்தாலே கோடிக்கணக்கில் ரயில்வே துறை லாபமடையலாம்.

    பதிலளிநீக்கு