செவ்வாய், 31 மார்ச், 2015

தமிழை நாடும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள்

இந்த முறை விடுமுறைக்கு செல்லும் போது ஊரில் அதிக அளவில் ப்ளிப்கார்ட் டெலிவரி நபர்களை பார்க்க முடிந்தது.


ஊர் என்றால் டவுனில் இருந்து 10கிமீ தொலைவில் உள்ள குக்கிராமம் தான்.

அங்கேயே ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் அதிக அளவில் ஊடுருவி இருப்பதை காண்பதில் ஆச்சர்யம் தான்.

அந்த அளவிற்கு இன்டர்நெட் பயன்பாடு அதிகரித்துள்ளது நல்லது தான்.



ஆன்லைன் நிறுவனங்கள் அடுத்து இரண்டாவது கட்ட நகரங்கள் மற்றும் கிராம புறங்களில் தான் அதிக வளர்ச்சியை எதிர்பார்க்கின்றன.

இதனால் எப்படியாவது இந்த சந்தையை மொத்தமாக அள்ளி விட வேண்டும் என்று இ-காமெர்ஸ் நிறுவனங்கள் போட்டி போட ஆரம்பித்துள்ளன.

அதன் முதல் கட்ட ஆயுதம் தான் மொழி.

அரை குறை ஆங்கிலத்தில் புரிந்தும் புரியாமலும் ஆர்டர் அதிகம் போடுபவர்கள் இருக்கிறார்கள் என்பதைக் கவனித்த ஆன்லைன்
நிறுவனங்கள் உள்ளூர் மொழிகளிலும் தளங்களை மாற்ற ஆரம்பித்துள்ளன.

கடந்த வருடம் Snapdeal தளம் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் ஆரம்பித்தது. அதற்கு கிடைத்த பயங்கர வரவேற்பை பார்த்த Snapdeal மேலும் பத்து மொழிகளில் விரிவாக்க ஆரம்பித்துள்ளது.

அதில் ஆச்சர்யம் பாருங்கள். ஹிந்தி மொழிக்கு அடுத்து தமிழுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது சந்தோசமாகவே உள்ளது. இவ்வளவிற்கும் தமிழ் மக்கட்தொகை தெலுங்கு மற்றும் வங்காளம் பேசுபவர்களை விட குறைவு தான். காரணமான மொழிப்போர் தியாகிகளுக்கு வணக்கங்கள்!

சொல்லவும் கூடுவதில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்

என்று சொன்ன பாரதியின் வாக்கு பொய்த்தால் மகிழ்ச்சி தான்.

இன்டர்நெட்டில் பரவலாகும் பிராந்திய மொழிகள் 

இணையத்தில் என்றாவது ஒரு நாள் தமிழ் ஆளுமை செலுத்தும் என்று எழுதிக் கொண்டிருப்பவர்களுக்கு ஆன்லைன் நிறுவனங்களின் முடிவு மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.

ஆமாம்.

இத்தகைய நடவடிக்கையால் இணையத்தில் தமிழில் விளம்பரங்கள் வெளிவரும். அதனால் தளம் நடத்துபவர்களுக்கும் விளம்பரங்கள் கிடைக்கும். விளம்பரம் மூலம் வருமானம் கிடைக்கும். அதனால் வெட்டியாக எழுதுகிறோமோ என்ற எண்ணம் தவிர்க்கப்படும்!

நீங்கள் எந்த துறையில் இருந்தாலும் உங்கள் எழுத்துக்களை தமிழில் தொடருங்கள்.. தாய் மொழியில் எழுதுவதால் மன அழுத்தம் குறையும். நண்பர்கள் கிடைப்பார்கள். காலப் போக்கில் வருமானமும் கிடைக்கும்.

ஏற்கனவே சொல்லி இருந்தோம். பிட்சா, பர்கர் விற்க ஆரம்பித்த Jubiliant Networks என்ற நிறுவனம் லாபம் கூடாமல் துவண்டு கிடக்கிறது.

அதற்கு பதிலாக லோக்கலாக இருப்பவை இணையத்திற்குள் வந்து வெளியில் விரிவாகும் போது லாபம் எளிதாக கிடைக்கிறது. வெற்றியும் கிடைக்கிறது.

பூம்புகாரில் விற்பவை, திருநேல்வேலி அல்வா, கோவில்பட்டி கடலைமிட்டாய் போன்றவை இணையத்தில் ஜொலிக்க ஆரம்பித்துள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

இருப்பதை பரவலாக வெளியே கொண்டு செல்லும் வகையில் நமது வியாபரத்தன்மையை மாற்றும் தருணம் இது!

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

2 கருத்துகள்:

  1. இந்தியாவை இனி ஆன்லைன் வர்த்தகம் ஆளப்போகிறது.... நீங்கள் கூறியது போல் நாகர்கோவிலில் இப்போது எங்கு பார்த்தாலும் ஒரு பெரிய பேக்கை மாட்டி கொண்டு பொடியன்கள் டெலிவரி செய்து கொண்டு இருக்கிறார்கள்...

    பதிலளிநீக்கு
  2. ஆமாம் சார். யாரும் கடை பக்கமே போவதில்லை போல..

    பதிலளிநீக்கு