வெள்ளி, 20 மார்ச், 2015

வேலை தேடுவோருக்கு ஒரு ஆறுதல் செய்தி

கடந்த வருடத்தில் பார்த்தால் ஏகப்பட்ட வேலை இழப்புகள். Nokia, IBM, Cisco, TCS என்று பல நிறுவனங்கள் பெருமளவில் வேலையை விட்டு பணியாளர்களை விலக்கி கொண்டு இருந்தன. அதிலும் TCS நிறுவனத்தின் வேலை நீக்கங்கள் போராட்டம் வரை சென்று வந்தது.


இந்த சூழ்நிலையில் இந்த செய்தி ஒரு ஆறுதலாக இருக்கும்.



இந்தியாவில் வேலை தேடுபவர்களுக்கான தளமான Naurki.com ஒவ்வொரு மாதம் அந்தந்த மாத வேலைவாய்ப்பு புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகிறது.

இந்தியாவில் அரசு அலுவல் பூர்வமாக வேலை வாய்ப்பு விவரங்கள் துல்லியமாக வெளிவருவதாக தெரிவதில்லை. அதனால் இத்தகைய தரவுகளை தான் கொஞ்சம் நம்ப வேண்டி உள்ளது.

ஜனவரி மாதம் வரை சுணக்கமாக இருந்த இந்திய வேலைவாய்ப்புகள் பிப்ரவரி மாதத்தில் அதிகரித்து உள்ளதாக கூறி உள்ளார்கள்.

அதிலும் மென்பொருள், வங்கி துறை, சேவை துறை போன்றவற்றின் வேலைவாய்ப்புகள் கணிசமான வேகத்தில் அதிகரித்து உள்ளது.  அதே நேரத்தில் ஆட்டோ, கட்டமைப்பு, விவசாயம், ஹோட்டல் போன்ற துறைகளில் வேலைவாய்ப்புகள் குறைந்து உள்ளன.

மொத்தத்தில் 10% வேலைவாய்ப்புகள் அதிகரித்து உள்ளதாக தெரிகிறது. ஹைதராபாத், புனே போன்ற நகரங்கள் அதிகமான வேலைவாய்ப்பு வளர்ச்சியைக் கண்டுள்ளன.

இது இந்திய தொழில் துறையை பொறுத்தவரை ஓரளவு மகிழ்வான செய்தியாகும்.

மென்பொருள், வங்கி துறைகளில் உள்ளவர்களை வைத்து ஆட்டோ, ரியல் எஸ்டேட் போன்ற துறைகளும் வளர்ச்சி காண வாய்ப்பு உள்ளது.

ஆனால் மென்பொருள் துறை வளர்ச்சியில் செல்வதாக சொல்லப்பட்டாலும் நாஸ்காம் அறிக்கை படி 3 முதல் 8 வருடங்கள் அனுபவங்கள் உள்ளவர்களுக்கே வாய்ப்புகள் கூடி உள்ளன.

புதிதாக முடித்து வருபவர்களுக்கும், அதிக அனுபவம் உடையவர்களுக்கும் வேலை வாய்ப்புகள் சுணக்கத்தில் உள்ளதாகவே தெரிகிறது.

அதனால் மென்பொருள் துறையை ஓய்வு காலம் வரை நம்பாமல் இருப்பது நலம் தான்...:)

தொடர்புடைய பதிவுகள்:




« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

1 கருத்து:

  1. பாவம், மென்பொருள் துறையை சேர்ந்தவர்கள். எங்கள் ஊரிலும் நிறைய வாலிபர்கள் வேலையில்லாமல் சுற்றுகிறார்கள். அவர்களிடம் என்ன படித்திருக்கிறாய் என கேட்டால் " software engineer" என்பார்கள். ஒரு காலத்தில் IT என்பது கனவாக இருந்தது. ஆனால் இப்போது அதை படிக்க, எனக்கு தெரிந்தவரை யாரும் பெரும்பாலும் விரும்பவது இல்லை!

    பதிலளிநீக்கு