கடந்த வாரம் ரிசர்வ் வங்கி கவர்னர் வங்கிகளுக்கு வழங்கும் கடன்களின் வட்டி விகிதத்தை 0.25% குறைத்தார்.
இந்த நடவடிக்கை நமக்கு வங்கிகள் வழங்கும் கடன்களுக்கான வட்டியையும் குறைக்க வழி செய்கிறது.
இது போக, பணவீக்கம் நல்ல நிலையில் இருப்பதையும், பொருளாதாரம் நல்ல நிலையில் செல்வதையும் ரிசர்வ் வங்கி தாமாகவே முன் வந்து குறிப்பிட்டு இருப்பது பெரிய அளவில் நம்பிக்கையைக் கொடுக்கிறது.
கடந்த மூன்று மாதங்களில் இரண்டாவது முறையாக வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது என்பதையும் கவனிக்க.
இப்படி வட்டி விகிதங்கள் குறையும் போது கடனுக்கான வட்டி மட்டும் குறையப் போவதல்ல. நாம் வங்கிகளில் போடும் டெபாசிட் பணத்திற்கான வட்டியும் குறையும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளாக இருந்த மந்த சூழ்நிலையில் பிக்ஸ்ட் டெபாசிட் மூலம் கிடைக்கப்பெற்ற வருமானமும், நிலம், நிபிட்டி போன்றவற்றில் செய்த முதலீடுகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஓரிரு சதவீதங்களே மாறுபாடு இருந்து இருக்கலாம்.
ஆனால் தற்போது இந்த இடைவெளி கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
வளர்ச்சி என்று வரும் போது பங்குச்சந்தையும் ரியல் எஸ்டேட்டும் போட்டி போட்டுக் கொண்டு வளரும். அதே நேரத்தில் வைப்பு நிதிகளில் (Fixed Deposit) போட்டு வைக்கும் வட்டி குறைந்து கொண்டே செல்லும்.
இன்னும் ரிசர்வ் வங்கி வட்டியைக் குறைக்கும் என்று இருக்கும் சூழ்நிலையில் வைப்பு நிதி வட்டிகள் 6% க்கும் கீழ் சென்றால் கூட ஆச்சர்யமில்லை.
இதனால் வங்கியில் இருக்கும் பணத்தை வெளியில் எடுக்கும் காலமாக தற்போதைய நிலையை கருதி கொள்ளலாம்.
வெளி முதலீடுகள் என்பது ரியல் எஸ்டேட், பங்குகள் என்று இருப்பது அதிக பலனைத் தரும்.
எமக்கு ரியல் எஸ்டேட், பற்றி அதிகளவு தெரியாது. அதனால் இடம், பொருள், காலமறிந்து எச்சரிக்கையாக முதலீடு செய்ய கேட்டுக் கொள்கிறோம்..
அதிக அளவில் Liquidity வேண்டும் என்றால் பங்குகளிலும் தாரளமாக முதலீடைத் தொடரலாம்!
காற்று இல்லாத போது உமி விற்பதும், மழை இல்லாத போது உப்பு விற்பதும் அதிக பலனைத் தரும்.
மார்ச் மாத போர்ட்போலியோ பற்றிய விவரங்களை இந்த இணைப்பில் அறியலாம்.
மார்ச் போர்ட்போலியோ பற்றிய அறிவிப்பு
தொடர்புடைய பதிவுகள்:

அருமையான பதிவு
பதிலளிநீக்கு