இந்த வாரம் முழுமையும் பட்ஜெட்டால் பயன் பெறும் விடயங்களைத் தான் விரிவாக எழுதி வருகிறோம்.
ஏற்கனவே பட்ஜெட்டை பங்குச்சந்தையின் பார்வையில் பார்த்தோம். நேற்று தங்க முதலீட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை பார்த்தோம்.
இன்று தனி மனிதர்களுக்கு என்னென்ன வரி விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன என்பதையும் பார்ப்போம்.
கடந்த வருடம் தான் ஜெட்லி வருமான வரி வரம்பை இரண்டு லட்சம் என்பதிலிருந்து 2.5 லட்சமாக உயர்த்தி இருந்தார். அதனால் இந்த வருடம் எந்த உயர்வும் காணப்படவில்லை. அதே வரம்புகளே தொடர்கிறது.
அதற்கு பதிலாக சில வருமான வரி விலக்கு சலுகைகளை வழங்கியுள்ளார்.
இதன்படி, மருத்துவ செலவுகளுக்கான வரம்பு 15,000 என்பதிலிருந்து 25,000 என்பதாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் வரை பலன் பெறலாம்.
தினசரி போக்குவரத்து செலவுகளுக்கான வரம்பு மாதந்தோறும் 800 ரூபாய் என்பதிலிருந்து 1600 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் குறைந்தபட்சம் 960 ரூபாய் வரை பலன் பெறலாம்.
அடுத்து, 80CCD என்ற விதியின் படி 50,000 ரூபாய் பென்ஷன் தொடர்பான திட்டங்களில் முதலீடு செய்யும் போது வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் குறைந்தபட்சம் 5000 ரூபாய் வரை பலன் பெறலாம்.
இதன் மூலம் ஏற்கனவே வழங்கப்பட்ட 1.5 லட்சம் முதலீடுகளுக்கான வரி விளக்குடன் இதுவும் சேர்ந்து ஒவ்வொரு வருடமும் இரண்டு லட்ச ரூபாய் முதலீடுகள் மூலம் வரி விலக்கு பெறலாம்.
இது போக, வீட்டுக் கடன் வட்டிக்கான வரி விலக்கு தொகையும் இரண்டு லட்சமாக உள்ளது.
ஆக, மொத்த வரி விலக்காக 4,44,200 ரூபாய் பெறலாம். இதன் மூலம் குறைந்தபட்சமாக 44,000 ரூபாய் வரியை சேமிக்க முடியும்.
சுருக்கமான விவரம்
80C வரி விலக்கு Rs. 1,50,000
80CCD வரி விலக்கு (NPS) Rs. 50,000
வீட்டுக் கடன் வட்டி Rs. 2,00,000
பயணச்செலவு Rs. 19,200
மருத்துவ செலவுகள் Rs. 25,000
மொத்தம் Rs. 4,44,200
தொடர்பான பதிவுகள்:

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக