வியாழன், 26 மார்ச், 2015

அம்மா பட்ஜெட்டால் எகிறிய TVS பங்கு

ஒவ்வொரு பட்ஜெட்டிலும் வித்தியாசமான புள்ளிவிவரங்கள் வெளிவரும்.
 
அருண் ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் அதிக அளவு 'முதலீடு' என்ற வார்த்தை இடம் பெற்றதாம். அதே போல் சிதம்பரம் செய்த பட்ஜெட்டில் 'பொருளாதாரம்' இடம் பெற்றதாம்.
ஆனால் நேற்று பன்னீர்செல்வம் தாக்கல் செய்த தமிழ்நாடு பட்ஜெட்டில் 'அம்மா' என்ற வார்த்தை 168 முறை இடம் பெற்றதாம். இதனால் 'அம்மா' பட்ஜெட் என்றும் அழைக்கலாம்.

இந்த 'அம்மா' புராணத்தின் ஒரு சேம்பிள் கீழே உள்ளது.

"வாஞ்சையே உருவாய் வள்ளலே திருவாய், தமிழகத்தை நடத்தும் எங்கள் அம்மா, வஞ்சகத்தை தகர்த்து எறிந்து நெஞ்கத்தை உயர்த்தி நிற்கும், தென்னகத்தின் தமிழகமே, தேசியத்தின் முதலிடமாய், விருது மேல் விருது வாங்கும் எங்கள் அம்மா, 3 எழுத்து மந்திரம் எங்கள் அம்மா, நானே வணங்கும் நான்காம் தமிழ், எட்டாம் அறிவு, ஒன்பதாம் வள்ளல், வாழ்வெல்லம் வழிநடத்தும் எங்கள் அம்மா, தமிழகத்தின் விடிவெள்ளி, ஏழைகளின் ஏந்தல், அப்பழுக்கற்ற செயல்களால் மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்றுள்ள மாண்புமிகு அம்மா............."

புகழ்ந்து பாடி பொற்கிழி பெற இது ஒன்றும் மன்னராட்சி இல்லை என்பதை அதிமுகவினர் உணர வேண்டும். 

அதிமுகவினர் இப்படியே முழு நேர ஜால்ராக்களாக இருந்து வந்தால் சிந்திக்கும் திறமை முழுமையாக போய் விடும்.

இந்த 'அம்மா' புராணத்தின் இடையிலும் ஒபிஸ் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.

அதன்படி, நிறுவனங்களுக்கு 650 கோடி அளவு வரி விலக்கு வழங்கி இருந்தார். அதாவது VAT வரியை நிறுவனங்களுக்கு 3% அளவு குறைத்து இருந்தார்.

இது பங்குச்சந்தையில் TVS பங்கில் நன்கு எதிரொலித்தது.  கிட்டத்தட்ட ஒரு முழுமையான தமிழக நிறுவனமான TVS இந்த வரிவிலக்கு பயனை நன்கு அனுபவிக்க உள்ளது.

இதன் காரணமாக TVS நிறுவனத்தின் லாபம் 60Bps புள்ளிகள் உயரும் என்று தெரிகிறது. அதாவது நிகர லாப விகிதம் 0.6% என்று அதிகரிக்குமாம்.

அதனால் நேற்று பங்குச்சந்தையில் TVS நிறுவனத்தின் பங்கு 3% அளவு வரை உயர்ந்தது.

ஏற்கனவே TVS பைக் விற்பனை அதிகரித்ததால் கடந்த ஒரு வருடத்தில் இந்த பங்கு கணிசமாக அதிகரித்து இருந்தது. தற்போதும் இந்த நிகழ்வும் சாதகமாக இருப்பதால் TVS பங்கு நல்ல டிமேண்ட்டில் உள்ளது.

இந்த பங்கு நமது கட்டண போர்ட்போலியோவில் கடந்த வருடம் பரிந்துரைக்கப்பட்டு 100% அளவு லாபம் கொடுத்தது என்பதையும் குறிப்பிட விரும்புகிறோம்.

« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

1 கருத்து:

  1. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. அம்மா யார் ? தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வர்.. சதியால் இன்று மக்கள் முதல்வராய் தமிழக மக்களின் மனதில் நீங்காத இடம்பிடித்து இருப்பவர். ஒபிஎஸ் 168 தடவை என்ன பத்தாயிரம் தடவை அம்மா என்று சொல்வதற்க்கு தகுதியுள்ளவர். இன்றைய பிரதமர் மோடியின் குஜராத்தில் கூட அம்மாவின் திட்டங்களில் பத்து சதவீதம் கூட செயல்படுத்த முடியவில்லை.. அம்மா உணவகத்தை இந்தியாவில் உள்ள ஏதாவது ஒரு மாநிலம் செயல்படுத்த திராணி இருக்கிறதா? இலவச தங்கத்தை பிரதமர் தொகுதியில் கொடுக்க ஆண்மை இருக்கிறதா? வாழ்க அம்மா வளர்க தமிழ்நாடு... வெல்லட்டும் நாஞ்சில் நாடு...

    பதிலளிநீக்கு