வியாழன், 19 மார்ச், 2015

பங்குகளின் விலையை சுற்ற வைக்கும் காரணிகள் (ப.ஆ - 38)

பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் முந்தைய பகுதியை இந்த இணைப்பில் காணலாம் .


  • பங்கு போர்ட்போலியோவை மறு சமநிலை செய்வது எப்படி? (ப.ஆ - 37)

  • தினமும் பங்குச்சந்தை நடக்கிறது. தினசரி பங்குகளின் விலைகளிலும் மாற்றம் நடக்கிறது.
    இதெல்லாம் ஏதோ அறிவுபூர்வமாகவோ அல்லது கணிதவியல் படித் தான் நடக்கிறதா என்றால் பெரும்பாலானவற்றை இல்லை என்று உறுதியாக சொல்லலாம்.



    எந்த ஒரு நிறுவனத்திற்கும் மிக முக்கியமானது நிதி முடிவுகளே. நிதி முடிவுகள் நன்றாக இருந்தால் கூட வேண்டும். இல்லாவிட்டால் குறைய வேண்டும் என்பது எளிமையான விதி.

    இது தவிர வேலையை விட்டு தூக்குதல், புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்தல் போன்ற செய்திகளும் முக்கிய பங்கு வகிக்கிறது.

    அப்படி பார்த்தால் பங்கு விலை என்பது வருடத்தில் அதிகபட்சம் ஒரு இருபது நாட்கள் தான் அதிக மாற்றம் பெற வேண்டும். அதற்கு மேல் நிறுவனம் பற்றிய செய்திகள் வர வாய்ப்பு இல்லை.

    ஆனால் நடைமுறையில் அப்படி இல்லை. தினமும் மாறிக் கொண்டே தான் உள்ளது.

    இதில் மனிதனின் சைக்காலஜி என்பது ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

    ஆசைகளும், பயங்களும் தான் சந்தையின் மாற்றங்களை நிர்ணயிக்கின்றன. இன்னும் லாபம் வேண்டும் என்ற ஆசையில் வாங்குவதும், வீழ்ந்து விடுமோ என்ற பயத்தில் விற்று விடுவதும் பங்குச்சந்தையை வருடம் முழுவதும் உயிரோடு வைக்கிறது.

    சூது கவ்வும் படத்தில் நயன்தாராவிற்கு கோவில் கட்டிய பாபி சிம்ஹா ரமேசிடம் ஏன் சார் வேலைக்கு போகவில்லையா என்று கேட்பார்..

    வெளியே போனால் அவன் சண்டை, வீட்டுக்கு வந்தால் பொண்டாட்டி சண்டை, மாமியார் -மகள் சண்டை என்று நீண்ட புராணம் சொல்லி எதுக்கு வேலைக்கு போகணும் என்று கேட்பார்.

    அதே போல் தான் பங்குச்சந்தையில். பங்கு விலைகள் மாறுவதற்கு எந்த காரணமும் இருக்கலாம்.

    மோடி கொடி ஏற்றினால் கூடும், அவர் தும்மினால் குறையும். அல்கொய்தா குண்டை போட்டால் குறையும். புதின் அமைதியாக இருந்தால் கூடும். இப்படி எந்த பிரச்சனைக்கும் பங்குச்சந்தையில் மட்டும் தான் ஒரு எதிர்வினை பார்க்க முடியும் .

    கீழே உள்ள படத்தை பாருங்கள்..



    இந்த பட்டியலில் உள்ள அத்தனை காரணிகளும் தான் பங்குச்சந்தையில் விலைகளை மாற்றி பல தின வர்த்தகர்களை வாழ வைத்துக் கொண்டு உள்ளன.

    படத்தை பார்த்தால் இவ்வளவு காரணிகளா என்று தலை சுற்றும்.. இன்னும் பல காரணிகளும் உள்ளன. இதனால் கடவுளால் கூட சரியாக சந்தையைக் கணிக்க முடியுமா என்பது சந்தேகம் தான். ஒவ்வொரு சிறு நிகழ்வும் ஏதோ ஒரு விதத்தில் பங்குச்சந்தையில் முக்கியத் துவம் பெறுகிறது. அதனால் தான் பலர் நீண்ட கால முதலீட்டை நோக்கி ஓடுகிறார்கள்.

    சைக்காலஜியில் சிறந்தவராகவும், காலத்தை கணிப்பவராகவும் இருந்தால் தின வர்த்தகத்தில் நல்ல சம்பாதிக்கலாம். அதற்கு அதிக நேரம் செலவளிக்க வேண்டும். ஒவ்வொரு செய்தியையும் பல கோணங்களில் யோசிக்க வேண்டும். அதே நேரத்தில் அதிக ரிஸ்கிற்கும் தயார் செய்து கொள்ள வேண்டும்.  தின வர்த்தக சூதாட்டத்தில் ஜெயிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல.



    பங்குச்சந்தை ஆரம்பம் என்ற இந்த தொடரின் அடுத்த பகுதியை இந்த இணைப்பில் காணலாம் .


    • பங்கினை பிரிப்பதற்கும், போனஸ் பங்கு கொடுப்பதற்கும் என்ன வித்தியாசம்? (ப.ஆ - 39)

    • தொடர்புடைய பதிவுகள்:


      « முந்தைய கட்டுரை




      Email: muthaleedu@gmail.com

      2 கருத்துகள்:

      1. நல்ல பதிவு. சந்தையை பற்றி ஒரு விழிப்புணர்வு ஏற்படுகிறது. இந்த பதிவுகளையெல்லாம், ஒரு புத்தகமாக வெளியிடலாம்.......

        பதிலளிநீக்கு