செவ்வாய், 17 மார்ச், 2015

INOX Wind IPOவை வாங்கலாமா?

Inox Wind Ltd என்ற நிறுவனம் இந்திய பங்குச்சந்தைக்குள் வருகிறது. நாளை முதல் IPO வெளியீட்டிற்கு வின்னப்பிக்கலாம். கடைசி தேதி மார்ச் 20.


Inox நிறுவனம் காற்றாலை மின்சாரம் தயாரிப்பதற்கான உபகரணங்களை உற்பத்தி செய்து வருகிறது. காற்றாலைகளை நிறுவும் பணிகளையும் செய்து வருகிறது.தற்போது சந்தையில் 700 கோடி ரூபாய் முதலீட்டினை திரட்ட வருகிறது. இந்த பணம் நிறுவனத்தினை விரிவாக்கம் செய்வதற்கு பயன்படவிருக்கிறது. பங்கு விலை 315 முதல் 325  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் உபகரணங்களை உற்பத்தி செய்யும் அனுமதியை இந்திய அரசிடம் பெற்றுள்ளது. இதனால் புதிய தொழில் நுட்பங்களை நிறுவனம் பெறுவது எளிதாக உள்ளது.

கடந்த ஆண்டில் வருமானம் 30% அளவு வளர்ச்சியை பெற்றுள்ளது. வரும் ஆண்டுகளிலும் இதே வளர்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக நிறுவனம் கூறி உள்ளது. இந்த நிறுவனத்தின் ஆர்டர் புக் 1200MW என்ற நல்ல அளவில் நிறைந்து காணப்படுகிறது.

இந்திய அரசு புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான வழிகளில் அதிக அளவு ஈடுபாடு கான்ப்பிப்பது காற்றாலை மின்சார உற்பத்தியாளர்களுக்கு சாதகமாக உள்ளது.

அடுத்த ஏழு ஆண்டுகளில் காற்றாலை மின்சாரதின் உற்பத்தியை இரண்டு மடங்காக அதிகரிக்க திட்டமிட்டு உள்ளது.

இந்த விடயங்கள் Inox நிறுவனத்திற்கும் சாதகமாக உள்ளது.

ஆனால் இலக்கை அடையும் அளவு இந்திய அரசு செயல் திட்டங்களை இன்னும் அறிவிக்கவில்லை என்பது ஒரு பாதகமான விடயம் தான்.

இதே துறையில் உள்ள SUZLON ENERGY போன்ற நிறுவனங்கள் இன்னும் தினறிக் கொண்டு இருப்பது இந்த துறையை பற்றிய சந்தேகத்தை உருவாக்குகிறது.

முக்கிய வாடிக்கையாளர்களாக அரசு மின் நிறுவனங்கள் மட்டும் இருப்பதும், அரசின் கொள்கை முடிவுகள் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதும் கவலையான அம்சங்கள்.IPO பங்கு விலை P/E மதிப்பில் 30 மடங்கு அதிகமாக உள்ளது. மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் இந்த பங்கு விலை கொஞ்சம் அதிகபட்சமாக உள்ளது.

நிறுவனத்தைப் பொறுத்த வரை எதிர்மறை விடயங்கள் இல்லை. ஆனால் இந்த துறை ஒரு தெளிவு இல்லாமல் இருப்பதால் அதிக ரிஸ்க் எடுப்பவர்கள் மட்டும் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யலாம்.


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

1 கருத்து: