சென்னை நோக்கியா நிறுவனத்தின் வரி ஏய்ப்பு விவகாரத்தில் இந்திய அரசு திணறி வருகிறது.
சென்னையில் உள்ள நோக்கியா தொழிற்சாலை அந்த நிறுவனத்தின் நான்காவது பெரிய செல்போன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாகும். சமீபத்தில் நோக்கியாவின் மொபைல் பிரிவு மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டதில் இந்த தொழிற்சாலை பிரிவும் கைமாற உள்ளது.
இந்த நிலையில் வருமான வரித்துறை ஏழு வருட காலமாக 2500 கோடி ரூபாய் அளவு வருமான வரி ஏய்ப்பு செய்ததாக தொழிற்சாலைக்கு சீல் வைக்க, வழக்கு கோர்ட்டுக்கு சென்றது. அரசுக்கு செலுத்த வேண்டிய வரி அபராதம், வட்டி என்று பலவிதமாக தற்பொழுது 21000 கோடியைத் தொட்டு விட்டது.
இது மைக்ரோசாப்ட் டீலுக்கு ஆப்பு வைக்குமளவு செல்ல, நோக்கியா நிறுவனம் தமது 7000 தொழிலாளர்களை வைத்து அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. இதனையடுத்து தொழிலாளர்கள் சங்கமும் வழக்கில் இணைய இந்த்திய அரசு தற்போது பேச்சுவாரத்தைக்கு இறங்கி வந்து உள்ளது.
இதையடுத்து நீதிமன்றத்தின் சில நிபந்தனைகளுடன் மைக்ரோசாப்ட் டீல் நடைபெறும் என்று தெரிகிறது.
இதற்கு முன் IBM, LG போன்ற நிறுவனங்களும் இந்த வரி எய்ப்பில் ஈடுப்பட்டுள்ளன.
சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு கண்ணை மூடிக் கொண்டு சலுகைகளைக் கொடுக்கும் அரசு இனியாவது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
கொரியாவில் இந்த வருடம் கடுமையான மின் தட்டுப்பாடு. ஆனால் ஒரு முறை கூட மின் தடை ஏற்பட்டதில்லை. மின் விசிறி, ஏசி பயன்படுத்த தடை என்று நிறுவனங்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் எளிதில் மின்பற்றாகுறையை சமாளித்தார்கள்.
ஆனால் தமிழ்நாட்டில் சென்னை தவிர மற்ற இடங்களுக்கு 50% அளவு மின் தடை, சென்னைக்கு 2 மணி நேர மின் தடை, வரி ஏய்ப்பு செய்யும் நோக்கியாவுக்கு 24 மணி நேர மின் விநியோகம்.
இப்படித் தான் வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பது அவசியமா?
சேவைகள் பிரிவில் மட்டும் சுற்றி வரும் பெரிய இந்திய நிறுவனங்கள் உற்பத்திப் பிரிவிலும் இறங்க வேண்டிய தருணம் இது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக