ஞாயிறு, 1 டிசம்பர், 2013

ஜான் கெர்ரி என்ன இந்தியாவின் வெளியறவு அமைச்சரா?

எமது தளத்தில் டாலர் வலுவடையக் காரணமான petrodollar முறை பற்றியும், ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியாவின் அந்நிய செலாவணியைப் பெரிதாக குறைக்கலாம் என்பது பற்றியும் விரிவான கட்டுரைகள் எழுதி இருந்தோம்.


விரிவான விவரங்களுக்கு இந்த கட்டுரைகளை பார்க்க..

இந்த நிலையில், ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளுக்கும் இடையே ஒரு தற்காலிக ஒப்பந்தம் ஏற்பட்டதாக அறியப்படுகிறது. இதற்கு ஈரானில் ஏற்பட்ட கடுமையான நிதிச்சுமையே காரணம்.



இதனால், நேற்று முன்தினம் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது, ‘ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை கணிசமான அளவு குறைத்துக் கொண்டுள்ளதால் சீனா, இந்தியா, கொரியா, துருக்கி, தைவான் ஆகிய நாடுகளுக்கு ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான தடையிலிருந்து தேசிய பாதுகாப்பு ஆணையச் சட்டத்தின் என்டிஏஏ) கீழ் விலக்களிக்கப்படுகிறது.

கடந்த 6 மாதமாக இந்த நாடுகளின் கொள்முதல் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு அதனடிப்படையில் அவற்றுக்கு இந்த விலக்கு அளிக்கப்படுகிறது' என இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதன் மூலம், அடுத்த ஆறு மாதங்கள், அதாவது 180 நாட்கள் எந்தவித அபராதமுமின்றி இந்த நாடுகள் ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து கொள்ளலாம்.

இந்தியா, சீனா தவிர கூடுதலாக மலேசியா, தென்னாப்பிரிக்கா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளுக்கும் இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கெர்ரியின் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அது சரி,

அமெரிக்காவுக்கு பிடிக்காவிட்டால் அவர்கள் எண்ணெய் வாங்காமல் போக வேண்டியது தானே. மற்ற நாடுகளை கட்டுப்படுத்த இவர்கள் யார்? ஜான் கெர்ரி என்ன உலகத்துக்கே வெளியறவு அமைச்சரா?

நம்ம ஊரில் மற்ற நாடுகளின் இறையாண்மை பற்றி அதிகம் பேசும் வெளியுறவு அமைச்சரும் நமது இறையாண்மையை காற்றில் பறக்க விடுவதேன்?

அதற்கெல்லாம் ஈரான், மொரிசியஸ் அளவாவது கொஞ்சம் தில் தேவை...


நமது பதிவுகளை பெற விரும்புவர் மின் அஞ்சல், முகநூல், ட்விட்டர் போன்ற ஏதேனும் ஒன்றில் எம்மைத் தொடரலாம். 

விவரங்களுக்கு, முதலீடைத் தொடர...

எளிய வழியாக muthaleedu@gmail.com என்ற முகவரிக்கு ஒரு Test Mail அனுப்புங்கள். கட்டுரைகள் உங்கள் முகவரிக்கு அனுப்பப்படும்.


« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக