வியாழன், 26 டிசம்பர், 2013

திரும்பிப் பார்க்கிறோம்! ஒரு லட்சம் கடந்த பொருளாதாரப் பதிவு,

நேற்று முன்தினம் எமது தளத்தில் இது வரை பார்க்கப்பட்ட பக்கங்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்தது. இந்த தருணத்தில் சில நிகழ்வுகளைத் திரும்பி பார்க்க விரும்புகிறோம்.


எமது தளம் ஆரம்பிக்கப்பட்ட பொழுது பதிவுலகில் பொருளாதாரப் பதிவாக இருந்தால் எடுபடுமா என்ற ஒரு பெரிய சந்தேகம் இருந்தது. அதனாலே பதிவு எழுதுவதை தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தோம். ஆனால் எமக்கு நண்பர்கள் அளித்த ஆதரவு நாம் நினைத்ததற்கு எதிர் மறையாகவே இருந்தது..

இந்த நேரத்தில் எமக்கு தமது தளத்தில் ஒரு அழகிய அறிமுகம் கொடுத்த நண்பர் செங்கோவி அவர்களுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம். அதன் பிறகு அவர் கொடுத்த சில டிப்ஸ்களும் அதிக அளவில் பயன்பட்டது.பல நண்பர்கள் கேட்டதற்கிணங்க ஒன்பது பங்குகளை பரிந்துரைத்து ஒரு போர்ட்போலியோவாக உருவாக்கினோம். அந்த போர்ட்போலியோ இன்று 26% லாபம் மூன்று மாதங்களில் கொடுத்து உள்ளது.

இது நாம் ஒரு வருடத்திற்கு எதிர்பார்த்த குறைந்தபட்ச லாபம் ஆகும். இதனை மூன்று மாதங்களில் அடைந்ததால் தற்பொழுது மனம் ஒரு வித அழுத்தம் இல்லாமல் உள்ளது. ஏனென்றால் எம்மை நம்பி கிட்டத்தட்ட 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்யப்பட்டு இருக்கிறது என்பதை நாம் அறிவோம்.

இந்த போர்ட்போலியோவை இந்த இணைப்பில் பார்க்கலாம்.
REVMUTHAL போர்ட்போலியோ 

முதலில் சொல்லியவாறே முடிந்த வரை இந்த தளம் எந்தவித சேவைக் கட்டணமின்றி, லாப நோக்கின்றி செயல்படும்.

தளத்தை நிர்வகிக்க கொஞ்சம் செலவாவதால் குறைந்தபட்ச விளம்பரங்கள் வாசகர்களைத் தொந்தரவு செய்யாமல் ஆங்காங்கே வெளியிடப்படுகிறது. அவ்வப்போது விளபரங்களை சொடுக்குவதன் மூலம் எமக்கு சிறிய உதவி புரியுங்கள். விளம்பரங்களால் ஏதேனும் தொந்தரவு இருப்பின் எம்மிடம் தெரியப்படுத்தவும்.

சில சமயங்களில் தமிழ்மணத்தில் ரேங்க் பிடிப்பதற்காக கவர்ச்சிகரமான தலைப்புகள் கொடுக்கலாமா என்று தோன்றும். ஆனால் அப்படிக் கொடுத்து நீண்ட கால நோக்கில் நமது தளத்தின் தரத்தைக் குறைக்க வேண்டாம் என்று நினைக்கிறோம்.

அடுத்து சில சமயங்களில் நிறைய உழைப்பு கொடுத்து சில பதிவுகள் பயனாக இருக்கும் என்று எழுதி இருப்போம். ஆனால் முறையாக பகிர்வு செய்யப்படாததாலும், மற்றும் பல காரணிகளாலும் அந்த பதிவுகள் ஓரிடத்தில் ஒளிந்துக் உள்ளன.

அதனையும் மற்ற சில பயனுள்ள பதிவுகளின் தொகுப்புகளையும் இங்கு பகிர்கிறோம்.

பங்குகளை delist செய்யும் போது நாம் என்ன செய்வது?

பங்குகளின் சரியான விலையை கண்டுபிடிப்பது எப்படி? - 1

ஏன் கெயிலுக்கு வேற வழியே இல்லையா?

அமெரிக்க டாலர் எப்படி உலக பொது நாணயமானது?

ஈரான் எப்படி இந்தியாவைக் காப்பாற்றும்?

வீட்டுக் கடன் அலைச்சலைக் குறைக்க ஒரு எளிய வழி

பண வீக்கத்தை CRR எப்படி கட்டுப்படுத்துகிறது?


Mutual Fund : ஒரு அறிமுகம்  - தொடர்

முதலீடை எப்படி பிரிக்கலாம் ? - 1 - தொடர்

பங்குச்சந்தை ஆரம்பம் - தொடர் முன்னோட்டம் (ப.ஆ - 1) - தொடர் 


நிறைய மின்னஞ்சல்கள் வருகின்றன. அதற்கு உடனடிப் பதிலளிப்பது என்பது கடினமாக உள்ளது. சில சமயங்களில் பதில் எழுத முடியாமலும் போய் இருக்கலாம். மன்னித்து விடுங்கள்! ஆனாலும் முடிந்த வரை பதிலளிக்க முற்படுகிறோம்.

உங்களது கருத்துகளைத் தொடர்ந்து பகிர்ந்து எமக்கு ஊக்கம் அளியுங்கள்!

நன்றி!
« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

2 கருத்துகள்:

  1. சிறந்த மற்றும் பயனுள்ள தகவலுக்கு நன்றிகள் பல.

    இயற்கை / மூலிகை தயாரிப்புகள் மூலமான தயரிப்புகளைப்பற்றிய விளம்பரமும் கூட முக்கியமானதும், பயனுள்ளதும் ஆகும். வெற்றியுடன் தொடர வாழ்த்துக்கள்.

    http://www.concurrentmusingsofahumanbeing.blogspot.com

    பதிலளிநீக்கு