சனி, 14 டிசம்பர், 2013

ஒரு விவசாயியின் அனுபவம்

இந்த கட்டுரை விவசாயிகளின் அவல நிலையை உண்மையான தகவல்களுடன் மிக எளிமையாக கூறுகிறது. நன்றி அமுதா, முகநூல்


***சென்றமாதம் என்னுடைய வயல் அறுவடையானது 
அதில், கதிர் அறுக்கும் எந்திரம் மூலம் அறுவடையான 
வயல் போக ஒரு அரை ஏக்கர் நெற்பயிர் பச்சயா இருக்கு
பிறகுதான் அருக்கமுடியும் என்று சென்றுவிட்டனர் ....
------------------------------------------------------------------------
சென்றவாரம் அந்த அரை ஏக்கர் நெற்பயிரை அறுப்பதற்கு
கதிர் அறுக்கும் எந்திரம்அனைத்தும், அறுவடை சீசன் முடிந்து ஆந்திரா, கர்நாடகம் சென்றுவிட்டதால், ஆட்களை
கொண்டு வயலை அறுக்கும் நிலையாகிவிட்டது .....
-------------------------------------------------------------------------
அந்த அரை ஏக்கர் நெற்பயிரை நான்குபேர் மூன்று நாள்
முழு நேர வேலையில் ஒரு ஆளுக்கு ரூபாய் 350 + சாப்பாடு
ரூபாய் 40 = ரூபாய் 390 மொத்தம் 12 ஆட்களுக்கு ரூபாய் 4680
கொடுத்து அறுத்து பண்ணிரண்டு மூட்டை நெல் கிடைத்தது ....
------------------------------------------------------------------------
ஒரு மூட்டை ரூபாய் 700 க்கு நெல் வியாரி விலைக்கு வாங்கினார், அதில் எனக்கு கிடைத்தது 700 x 12 = 8400
--------------------------------------------------------------------------
பயிர் அறுப்பதற்கான கூலி ரூபாய் 4680 போக ரூபாய் 8400 இல்
மீதம் ரூபாய் 3720 கிடைத்து
-------------------------------------------------------------------------
அந்த அரை ஏக்கர் நெற்பயிரை உருவாக்க எனக்கு ஆன
செலவு எவ்வளவு தெரியுமா ..??

விதைநெல்.......................... ரூ. 600
நாற்றங்கால் செலவு .......... ரூ. 700
நாற்றங்கால் உரம் ...............ரூ. 150
நாத்து பறிக்க ....................... ரூ. 700
அரை ஏக்கர் புழுதி உழவு .... ரூ. 500
சேற்று உழவு ....................... ரூ. 600
வயல் நடவு கூலி .................ரூ. 1100
முதல் கலை எடுப்பு ............ரூ. 700
முதல் உரம் ..........................ரூ. 600
பூச்சி கொல்லி தெளித்தது ...ரூ. 450
இரண்டாம் கலை எடுப்பு .....ரூ. 500
இரண்டாம் உரம் ..................ரூ. 600
மூன்றாம் உரம் ....................ரூ. 400
பயிர் அறுப்பதற்கான கூலி ரூ. 4680
___________________________________
மொத்த செலவு ...................ரூ. 12280
நெல் விற்கப்பட்டது .......... ரூ. 8400
___________________________________
நஷ்டம் ................................ ரூ. 3880

-----------------------------------------------------------------------
ஒரு மூட்டை DAP உரத்தின் விலை .... ரூ. 1200
-----------------------------------------------------------------------
ரேசன் கடையில் மாதம் பத்து ரூபாய்க்கு இருபது கிலோ
அரிசி கிடைப்பதால், வயல் வேலை செய்ய யாரும்
முன்புபோல நெல்லை கூலியாக பெற மறுக்கின்றனர்
வயல் வேலை செய்ய பணம்தான் வேண்டும் என்கின்றனர்
----------------------------------------------------------------------
திருவையாறு பகுதியில் வயல் வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை, சிறிய வேலைக்கு கூட வயலுக்கு உள்ளே போயிட்டு வெளியே வந்தா கூலி 350 + சாப்பாடு 40 = ரூ. 390 கொடுக்கவேண்டியுள்ளது ...
----------------------------------------------------------------------
அதை அப்படியே வாங்கி கொண்டுபோய் டாஸ்மாக் கடையில்
கொடுத்து சாராயம் குடித்துவிடுகின்றனர் ...
---------------------------------------------------------------------
அருகில் இருக்கும் ஆறுகளில் அதிக அளவு மணல் எடுப்பதால்
நிலத்தடி நீர் சென்ற ஆண்டு 200 அடியில் இருந்து வந்த ஆழ்குழாய் கிணற்று நீர் தற்போது 300 அடிக்கு மேல் சென்றுவிட்டது ...
-----------------------------------------------------------------------
விட்டு விட்டு வரும் மின்சாரத்தில் குறைந்த அளவு தண்ணீர்
மட்டுமே கிடைக்கிறது, அது நெல் விவசாயம் செய்ய போதுமானதாக இல்லை ....
-----------------------------------------------------------------------
இவ்வளவு கஷ்டப்பட்டு, நஷ்டப்பட்டு நான் நெல் விவசாயம்
செய்ய வேண்டுமா ....???
----------------------------------------------------------------------
இந்த வருடத்தில் இருந்து என் வீட்டுக்கு மட்டும் கொஞ்சம் நெல் பயிரிட்டால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டேன்
-----------------------------------------------------------------------
எனக்கு மட்டும் அல்ல ....நெல் பயிர் செய்யும் அணைத்து
விவசாயிக்கும் இதே நிலைதான் .....
------------------------------------------------------------------------
விவசாயியை பாதுகாக்காமல், எவ்வளவு நாளைக்கு பத்து ரூபாய்க்கு இருபது கிலோ அரிசி கொடுக்கமுடியும் ...???
------------------------------------------------------------------------
இதே நிலை நீடித்தால் என்ன ஆகும் .... ???

- அமுதா அமுதா


***
விவசாயிகள் இனியும் அரசை நம்புவதில் பயனில்லை. நவீன இயந்திரங்களுக்கு மாறுவதே சரியான தீர்வாக இருக்கும்.


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

2 கருத்துகள்:

 1. Kidaikum !!

  It is very hard to be sucessful following old methods. If want to continue with paddy cultivation .place where you are planting
  should have abundant labours so u can get labours cheap or else
  move to other less labour intensive crops .

  முதல் உரம் ..........................ரூ. 600
  இரண்டாம் உரம் ..................ரூ. 600
  மூன்றாம் உரம் ....................ரூ. 400
  பூச்சி கொல்லி தெளித்தது ...ரூ. 450
  =================================
  2050
  =================================
  ---->3880-2050 = 1830

  1.
  இயற்கை விவசாயம் செய்து இருந்தால் மேலே உள்ள செலவை குறைத்து இருக்கலாம் .

  2.தரகர் இடம் விற்றது இரண்டாவது
  அரசு விலை 1360 ஆக, 16320

  3.Aaaga Motham 16230 -10230 =6000
  Laabam =6000

  4. Adigamaana Selavu Nathangaal Neradi vidai vidaipu seidu irukalaaemin
  nadavukkum Kalai Eduthu Irupadaal .Neradi Vidai Vidaipil Keel kanda Selavai Thavirthu
  irukalaam.

  நாற்றங்கால் செலவு .......... ரூ. 700
  நாற்றங்கால் உரம் ...............ரூ. 150
  நாத்து பறிக்க ....................... ரூ. 700
  வயல் நடவு கூலி .................ரூ. 1100
  ============================
  2650
  ============================

  Aaaga Laabam --------->8650

  I agree with your point of cultivate paddy only for self purpose ,

  There is no point in criticising labours ,IT person sits at A/C room and gets money in lakhs and similarly other profession.
  Dont expect some one for own home work .Those days are gone where people were fond of performing tasks in farm land .

  Reason !!

  Now people go for city works(construction,mills ) with pick and drop + no work pay from 100days work+ free rice from government

  This problem is faced at all levels of farming .Only way is to move towards sustenance farming(natural ancient method) and move to less intensive labour crops .

  By adopting to natural farming 6000 is Profit !!!

  At this instance dont discourage people towards farming ,Already farming is in deep decline .
  .As per government 10L farmers decline from farming this is official figure not sure what is the original figure.


  பதிலளிநீக்கு
 2. Dear Friend,Thankf for your info.! This post is not about discouraging farming..just share the real situation..Even I also feel very sad about the condition..Kindly put your name/contact while posting comments..So that easy to contact you..

  பதிலளிநீக்கு