திங்கள், 16 டிசம்பர், 2013

அந்நிய முதலீடு வரையறையைத் தொட்ட HDFC

இன்று RBI அந்நிய முதலீட்டார்கள் HDFC வங்கி பங்குகளை வாங்குவதற்கு கட்டுப்பாடு விதித்தது.


இந்த வருடம் மத்திய அரசு வங்கித் துறையில் அந்நிய முதலீடு வரையறையை மாற்றி அமைத்தது.

அதன்படி Automatic Route என்று சொல்லப்படும் நேரடி பங்கு முதலீட்டின் மூலமாக 49%மும், அரசின் ஒப்புதலோடு 74% வரை உயர்த்திக் கொள்ளலாம் என்று மாற்றம் செய்யப்பட்டது. இன்னும் இந்த நடைமுறை கடைசிக் கட்ட ஒப்புதலுக்காக காத்து இருக்கிறது.


தற்பொழுது HDFC வங்கியின் அந்நிய முதலீடு சதவீதம் 49% என்று எட்டி விட்டதால் RBI அந்நிய முதலீட்டார்கள் இந்த பங்குகளை வாங்க கட்டுப்பாடு விதித்து உள்ளது.

இதனால் HDFC வங்கி  சர்வதேச முதலீட்டு பங்குகள் பட்டியலில் இருந்து விலக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக HDFC வங்கி பங்குகள் இன்று 3% சரிந்தன.

இதே போல் சூழ்நிலை இதற்கு முன்னால் AXIS வங்கிக்கும் ஏற்பட்டுள்ளது. ICICI வங்கிக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது.

நமது போர்ட்போலியோவிலும் HDFC பங்குகள் உள்ளது. தற்போதைக்கு இந்த நிகழ்வு எந்த அளவு பாதிப்பு ஏற்படுத்தும் என்று தெரியவில்லை.

ஆனால் HDFC வங்கி இந்த காலாண்டில் 16% அதிக வரி கட்டியுள்ளது. அதே நேரத்தில் SBI வங்கி 30% குறைவாக வரி கட்டி உள்ளது. அதாவது HDFC  வங்கியின் வருமானம் இன்னும் குறையவில்லை. அதனால் மற்ற வங்கிகளுடன் ஒப்பிடுகையில் இன்னும் HDFC ஒரு நல்ல "Value Investing" பங்கே.

அரசின் கொள்கை முடிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த பங்கில் தொடரும் நிலையை கொஞ்சம் காத்திருந்து முடிவு செய்யலாம்.

 
« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக