கடந்தப் பதிவில் 2014ல் பங்குச்சந்தை எப்படி இருக்கலாம் என்ற எமது அனுமானங்களை பதிவு செய்து இருந்தோம். அதன் அடுத்த பாகம் இங்கே தொடர்கிறது.
முந்தைய பதிவின் இணைப்பு இங்கே.
வங்கி
கடந்தப் பதிவில் சொல்லப்பட்ட நடவடிக்கைகளால் தொழில் துறை வளர்ச்சி குறைந்த பட்சம் இந்த வருடத்தை விட நன்றாக இருக்கும் என்று நினைக்கிறோம். இதனால் வங்கிகளின் முக்கியப் பிரச்சினையான வாராக் கடன் கணிசமாகக் குறையும்.
ஆனால் அதே நேரத்தில் பணவீக்கம் இன்னும் கட்டுக்குள் வர வில்லை. அதிலும் உணவு பணவீக்கதைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு திணறி வருகிறது.
இதனால் வங்கி பங்குகளில் அதிக அளவு இல்லாமல், ஓரளவு வளர்ச்சி எதிர்பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.
YES Bank, Axis Bank மற்றும் HDFC பங்குகளை தொடர்ந்து கண்காணித்து வரலாம்.
YES Bank, Axis Bank மற்றும் HDFC பங்குகளை தொடர்ந்து கண்காணித்து வரலாம்.
மென்பொருள்
மென்பொருள் துறையைப் பொறுத்த அளவில் இந்த வருடம் போல் நன்றாக செயல்படும் என்று நினைக்கிறோம். டாலர் ஏற்ற, இறக்கங்களைத் தவிர வேறு ஒன்றும் பெரிய அளவில் பிரச்சினை இல்லை. TCS, HCL பங்குகளை கவனித்து வாருங்கள்.
ரியல் எஸ்டேட்
ரியல் எஸ்டேட் துறையிலும் நெடுஞ்சாலை உள்ளிட்ட சில பெரிய திட்டங்கள் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அரசின் நிலம் கையகப்படுத்துதல் என்ற புதிய கொள்கை இந்த துறைக்குப் பாதகமாக அமையலாம். இதனால் ரியல் எஸ்டேட்டில் தெளிவான கருத்து ஏதும் கூற முடியவில்லை.
மற்றவை
ஆட்டோ துறைக்கு இன்னும் ஒரு நேர்மறையான அறிகுறி தென்படவில்லை.
மற்றபடி விவசாயம், சேவை, எரிசக்தி போன்ற துறைகளுக்கு இன்னும் ஒரு தெளிவு கிடைக்கவில்லை.
ஆட்டோவில் Amara Raja Batteries நிதி நிலை நன்றாக இருக்கும் என்று நினைக்கிறோம். பொறியியலில் Astra Microwave என்ற ஒரு நிறுவனம் நன்றாக செயல்படும் என்று நினைக்கிறோம்.
ஆட்டோவில் Amara Raja Batteries நிதி நிலை நன்றாக இருக்கும் என்று நினைக்கிறோம். பொறியியலில் Astra Microwave என்ற ஒரு நிறுவனம் நன்றாக செயல்படும் என்று நினைக்கிறோம்.
தேர்தல்:
இந்த பத்தியை அரசியல் கண்ணோட்டமாக பாராமல் முதலீட்டாளராக படியுங்கள்.
கண்டிப்பாக காங்கிரஸ் ஆட்சிக்கு வாராது என்று தெரிகிறது. ஆனால் மற்ற யார் வருவார்கள் என்பதில் பெரிய குழப்பம் உள்ளது.
மோடி வந்து நிலையான ஆட்சி கொடுத்தால் பங்குசந்தையில் சில நேர்மறையான மாற்றங்கள் இருக்கலாம். மூன்றாவது அணியாக யார் வந்தாலும் நீடிப்பது கஷ்டம் என்ற நிலையில் பங்குசந்தையும் ஓரளவு பாதிக்கலாம்.
ஆனால் இந்திய அரசியல்வாதிகளைப் பொறுத்த வரை ஊழல் என்ற ஒன்று மட்டும் தான் அவர்கள் பண்ணுகிறார்கள். மற்றபடி வெளியுறவு, நிதி என்று பலமுடிவுகளும் அதிகாரிகள் மட்டத்திலே எடுக்கப்படுகின்றன. இதனால் தேர்தல் முடிவுகள் அந்த அளவு பாதிக்காது என்றே நினைக்கிறேன்.
இந்த வருடம் காங்கிரஸ் வாங்கிய அடியைப் பார்த்து குறைந்தபட்சம் அடுத்த ஒரு வருடத்திற்கு அதிக அளவில் ஊழல் இருக்காது என்றே நினைக்கிறேன். அதனால் ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் 2014 பங்குசந்தையை தைரியமாக அணுகலாம்.
நல்ல நிறுவன பங்குகளின் வீழ்ச்சி என்பது தற்காலிகமே. இதனைப் புறக்காரணிகள் நீண்ட கால அளவில் பெரிய அளவில் பாதிக்காது. அதனால் அதிக முக்கியத்துவத்தை நிறுவன செயல்பாடுகள், நிதி நிலை அறிக்கைகளுக்கு கொடுங்கள். எளிதில் லாபமும் கிடைக்கும்.
உங்கள் பங்கு வணிகம் 2014ல் அமோக வெற்றி பெற எமது வாழ்த்துக்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக