செவ்வாய், 17 டிசம்பர், 2013

இந்திய நுகர்வோரைக் குறிவைக்கும் அந்நிய நிறுவனங்கள்(GSK Offer)

GlaxoSmithkline Pharmaceuticals என்ற நிறுவனம் சந்தையில் தமது பங்குகளை 26% அதிகம் கொடுத்து வாங்குவதாக அறிவித்துள்ளது.


நேற்று முன்தினம் GSK நிறுவனம் சந்தையில் தமது GlaxoSmithkline Pharmaceuticals  துணை நிறுவனத்தின் 24% பங்குகளை 26% அதிக விலைக்கு வாங்குவதாக அறிவித்தது. அதாவது 2400 ரூபாய் அளவு விற்றுக் கொண்டிருந்த பங்கை 3100 ரூபாய்க்கு வாங்குவதாக அறிவத்தது. இதனால் பங்கு விலை ஒரே நாளில் 20% உயர்ந்தது.



முதலீட்டாளர் பார்வையில் பார்த்தால் இந்த "Open Offer" மூலம் பங்குகளை விற்று லாபத்தை உடனடியாக ஏற்றுக் கொள்வது நல்லது. ஏனென்றால் இது ஒரு "Healthy Offer" என்று நம்பப்படுகிறது. மீண்டும் பங்கு விலை "Open Offer" விலையை விட குறைவாக வரவும் வாய்ப்பு உள்ளது.

இதே போல் கடந்த மூன்று மாதங்கள் முன் HUL நிறுவனம் தமது பங்குகளை 14%  மட்டும் அதிகமாக கொடுத்து "Open Offer"ல் வாங்கியது. அதுவே 62% வெற்றியடைந்தது. அதனால் "GSK Open Offer" வெற்றியடைய வாய்ப்புகள் அதிகம்.

இதன் மூலம் GSK நிறுவனத்தின் பங்கு சதவீதம் 75% அளவு உயருகிறது. பங்குச்சந்தை விதிகள் படி அதிகபட்சமாக 75% பங்குகளை மட்டுமே Promoters வைத்துக் கொள்ள முடியும். இதன்படி GSK நிறுவனம் உச்ச வரம்பை எட்டுகிறது. பல வெளிநாட்டு நிறுவனங்கள் அரசின் அந்நிய முதலீட்டுக் கொள்கைகள் காரணமாக இந்த எல்லையில் உள்ளன.

ஒன்றைப் பார்த்தால்,

கடந்த ஓரிரு வருடங்களாக பார்த்தால் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய நுகர்வோர் மற்றும் மருந்து சந்தையைக் குறிவைத்து தங்கள் முதலீட்டை அதிகப்படுத்தி வருகின்றன.

2020 வரை ஒவ்வொரு வருடமும் நுகர்வோர் சந்தை 20%மும், மருந்து சந்தை 15%மும் வளர்ச்சி அடைய வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதனால் தான் நிறைய வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய மருந்து மற்றும் நுகர்வோர் சந்தையை குறிவைத்து அதிக அளவு முதலீடு செய்து வருகின்றன.

சிறு முதலீட்டார்களும் தங்கள் போர்ட்போலியோவில் மருந்து மற்றும் நுகர்வோர் துறைகளுக்கு கணிசமான ஒதுக்கீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

ஓய்வு. குழந்தைகள் திருமணம் என்று நீண்ட கால தேவைகளுக்கும் மருந்து மற்றும் நுகர்வோர் துறைகளில் சில நல்ல பங்குகளைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்தால் ஒரு பாதுகாப்பான "Return" கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.

பயன்படுத்திக் கொள்ளுங்கள்!


 
« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக