புதன், 11 டிசம்பர், 2013

சென்செக்ஸ் கீழே செல்கிறது. என்ன செய்வது?

இன்று சென்செக்ஸ் மீண்டும் 21000 புள்ளிகளுக்கு கீழே வந்து கொண்டு இருக்கிறது. இருபதாயிரத்தையும் தொடலாம் என்கிறார்கள். இந்த சமயத்தில் நீண்ட கால முதலீட்டாளர்கள் என்ன செய்வது?


தேர்தல் முடிவுகள் வந்தது. பிஜேபி வெற்றி பெற்றது. பங்குச்சந்தை மேலே சென்றது. அதற்கடுத்து ஒரு வார கால இடைவெளியில் மீண்டும் பலனடைந்த புள்ளிகளை இழந்தது.

இந்த இடைப்பட்ட காலத்தில் பெரிதாக பொருளாதார நிகழ்வுகள் ஒன்றும் நடந்து விட வில்லை. அதனால் இது தரகர்கள் ஆடும் ஆட்டமே என்று எளிதாக புரிந்து கொள்ளளலாம்.

ஆனால் நீண்ட கால முதலீட்டார்கள் இந்த சரிவுகளை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சமயத்தில் பகுதி பகுதியாக பங்குகளை வாங்கிப் போடுவோம்.அடுத்த காலாண்டு நிதி நிலை முடிவுகள் வரும் போது நமது பங்குகளின் உண்மையான நிலவரம் தெரிய வரும்.  அப்பொழுது ஏதேனும் எதிர்மறைகள் இருந்தால் விற்று விடலாம்.

நம்மைப் பொறுத்த வரை பங்குகளை விற்பதற்கு ஒரு காரணம் வேண்டும் என்றால் அது நிதி நிலை அறிக்கையில் உள்ள ஒரு பிரச்சினையாக தான் இருக்க வேண்டுமே தவிர சந்தைகளின் தற்காலிக நிலவரங்கள் பெரிது இல்லை.

அது வரை ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் நமக்கொன்றும்  கவலை இல்லை...

ஒரு கொசுறு. கடந்த மூன்று மாதங்களில் சென்செக்ஸ் 10% உயர்ந்துள்ளது. ஆனால் நமது போர்ட்போலியோ 22% உயர்ந்துள்ளது.

SO
Sensex is just a reference scale. Not a value investing parameter.

இது தொடர்பான முந்தைய பதிவு
இன்று பங்குச்சந்தையில் வேடிக்கை மட்டும் பார்ப்போம்.


« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக