திங்கள், 9 டிசம்பர், 2013

3 மாதத்தில் 67% லாபம் கொடுத்த ASHAPURA

எமது போர்ட்போலியோவில் ASHAPURA MINECHEM என்ற நிறுவனத்தை 40 ரூபாய்க்கு பரிந்துரை செய்து இருந்தோம். இன்று இந்த பங்கின் மதிப்பு 67 ரூபாயைத் தாண்டியுள்ளது. இதனால் நமக்கு கிடைத்த லாபம் 67%. இது மூன்று மாதங்களில் கிடைத்துள்ளது.


இதற்கு முக்கியக் காரணம் கடந்த காலாண்டில் நிறுவனத்தின் லாபகரமான நிதி அறிக்கை தான். கடந்த வருட காலாண்டை ஒப்பிடுகையில் 229% லாபம் கிடைத்துள்ளது.

இது தொடர்பான எமது முந்தைய கட்டுரை.
பங்கு ஒரு பார்வை: ASHAPURA MINECHEM

இதனால் கடந்த ஒரு வாரத்தில் Mutual Fund  மற்றும் Capital நிறுவனங்கள் இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கி குவித்து வருகின்றன.


Eriska Investment Fund 37 லட்சம் பங்குகளையும், LTS Investment Fund Ltd bought 41 லட்சம் பங்குகளையும், Merrill Lynch Capital Markets என்ற நிறுவனம் 11 லட்சம் பங்குகளையும் Albula Investment Fund 77 லட்சம் பங்குகளையும் வாங்கியுள்ளது. இந்த அணைத்து டீல்களும் கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே நடந்துள்ளன.

இவர்கள் காரணம் ஏதும் இல்லாமல் இப்படி மொத்தமாக வாங்கி போட மாட்டார்கள். இன்னும் இரண்டு காலாண்டுகளுக்கு இதே அளவில் நிதி நிலை அறிக்கை இருந்தால் குறைந்தபட்சம் இந்த பங்கின் முதலீடு இரண்டு மடங்காக மாறுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.

அதனால் நமது வாசகர்கள் தங்களிடம் உள்ள பங்கை விற்று விடாமல் வைத்துக் கொள்ளலாம்.

Power of value investing is really great!

நமது முழு போர்ட்போலியோவை இங்குக் காணலாம்.
REVMUTHAL போர்ட்போலியோ

நமது பதிவுகளை பெற விரும்புவர் மின் அஞ்சல், முகநூல், ட்விட்டர் போன்ற ஏதேனும் ஒன்றில் எம்மைத் தொடரலாம். 

விவரங்களுக்கு, முதலீடைத் தொடர...« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக