ஞாயிறு, 29 டிசம்பர், 2013

இந்த பங்குகள் மீது ஒரு கண் வைத்துக் கொள்ளுங்கள்

கடந்த வாரத்தில் மத்திய அரசு எடுத்த சில முடிவுகள் சில பங்குகள் மீது நீண்ட கால நோக்கில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் திறன் உள்ளது. இதனை இங்கு பகிர்கிறோம்.


கடந்த வாரம் நமது வாசகர் ஒருவர் சாட்டில் பங்குகளை பரிந்துரை செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டு இருந்தார். ஆனால் இதில் எமக்கு உடன்பாடு இல்லை.

நீண்ட கால நோக்கில் எமது வாசகர்கள் பங்கினைத் தேர்ந்தெடுக்கும் திறனைப் பெற வேண்டும் என்று விரும்புகிறோம். அதற்கானத் தகவல்களை இங்குப் பகிர்கிறோம்.

தேர்ந்தெடுக்கும் திறனைப் பெறுவதற்கான, உபயோகமான தளமாக இந்த தளத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று வேண்டுகிறோம்.

கீழே உள்ள சில செய்திகள் நீண்ட கால முதலீட்டார்களுக்கு சில நல்ல பங்குகளை குறைந்த விலையில் தேர்ந்தெடுக்க ஒரு நல்ல வாய்ப்பு. பயன்படுத்திக் கொள்ளுங்கள்!


சுகர் கம்பெனிகளுக்கு வட்டியில்லாக் கடன்


மத்திய அரசு சர்க்கரை ஆலைகளுக்கு 6600 கோடி அளவு வட்டியில்லாக் கடன்கள் வழங்க உள்ளது. இதனால் ஏற்படும் 2750 கோடி சுமையை மத்திய அரசு ஏற்க உள்ளது.

அதனால் இதற்கு முன்னால் நன்றாக செயல்பட்டு, திடீரென நஷ்டமடைந்து காணப்படும் சுகர் கம்பெனிகளை இந்த சமயத்தில் வாங்கிப் போட்டால் நீண்ட கால நோக்கில் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

AXIS BANK மீதான அந்நிய முதலீடு உயர்த்தப்பட்டது


கடந்த வாரம் AXIS BANK மீதான வெளிநாட்டு முதலீடு சதவீதம் 49 சதவீதத்தில் இருந்து 62 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதனால் குறுகிய கால நோக்கில் பங்கு விலை உயர வாய்ப்பு உள்ளது.

மேலும் நன்றாக செயல்பட்டு வரும் வங்கியாக இருப்பதால் நீண்ட கால நோக்கிலும் முதலீடு செய்யலாம்.

இதே போன்றொரு முடிவை நமது போர்ட்போலியோவில் உள்ள  HDFC வங்கியிலும் எதிர்பார்க்கலாம். அதனால் HDFC பங்கில் நாம் தொடருவோம்.

தளர்த்தப்பட்ட நிலக்கரி விதிமுறைகள்


ஒன்பது பெரிய பவர் ப்ராஜெக்ட்களுக்கு தேவையான  நிலக்கரி விநியோகம் செய்வதற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளது.இந்த திட்டங்களுடைய மொத்த மதிப்பு 60000 கோடி.  இந்த திட்டங்கள் தொடர்பான நிறுவனங்கள் மீது ஒரு கண் வைத்துக் கொள்ளுங்கள். நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

திட்டங்கள் விபரம்:
Essar Power’s Mahan, Adani Power’s Tiroda project, Damodar Vally Corporation’s Mejia project, Gujarat State Electricity Board’s Ukai project and Mahagenco’s Parli project.


இந்த செய்திகளை உரிய முறையில்  பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அரசு தற்போது மிக வேகமாக செயல்பட்டு வருவது போல் தெரிகிறது. இது அடுத்து ஆட்சிக்கு வருபவர்களுக்கு தான் அதிக பலன் கொடுக்கப் போகிறது.

எல்லாம் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் தான்..

 
« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

2 கருத்துகள்: