புதன், 4 டிசம்பர், 2013

18% லாப வளர்ச்சி கண்ட Abbott India

நமது போர்ட் போலியோவில் "ABBOTT INDIA" என்ற மருந்து நிறுவனத்தை பரிந்துரைத்து இருந்தோம்.

மேலும் விவரங்களுக்கு இங்கு பார்க்க :
இந்திய ஊட்டச்சத்து மருந்து சந்தையை பிடிக்கும் Abbott


இந்த நிறுவனம் 1350 ரூபாய்க்கு பரிந்துரைக்கப்பட்டது. தற்போது 1550 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. அதாவது நமக்கு இரண்டு மாதங்களில் 15% லாபம் கொடுத்து உள்ளது.



இந்த உயர்வுக்கு நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது.

இங்கு நிறுவனத்தின் சுருக்கமான நிதி நிலை அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
ABBOTT2Q'132Q'12Growth
Net sales(in Cr)4564169.6%
EBIT(in Cr)68.1756.0921.5%
Op. Profit(In Cr)45.1938.3318%


நிதி நிலை அறிக்கையின் முக்கிய அம்சங்களை பார்ப்போம். கடந்த வருட காலாண்டு அறிக்கையுடன்  ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது.
  • விற்பனை 9.6% அதிகரித்துள்ளது.
  • நிகர லாபம் 18% அதிகரித்துள்ளது.
  • செலவுகள் 7% அதிகரித்துள்ளது.
  • தன்னுடைய நிதி வருடத்தை Jan-Dec என்பதை Apr-Mar என்பதாக மாற்றி அமைத்துள்ளது.
ஒன்றை கவனித்தால், மற்ற மருந்து நிறுவனங்கள் சராசரியாக 12% மட்டுமே வளர்ச்சி கொடுத்துள்ளன. அதனுடன் ஒப்பிடுகையில் இந்த நிறுவனம் மிக நல்ல முடிவுகளை கொடுத்துள்ளது.

அதனால் இந்த பங்கில் நாமும் தொடரலாம். இப்படியே சென்றால் இரண்டு வருடங்களில் குறைந்தது 50% லாபம் எதிர்பார்க்கலாம் என்று நினைக்கிறோம்.

நமது பதிவுகளை பெற விரும்புவர் மின் அஞ்சல், முகநூல், ட்விட்டர் போன்ற ஏதேனும் ஒன்றில் எம்மைத் தொடரலாம். 

விவரங்களுக்கு, முதலீடைத் தொடர...

எளிய வழியாக muthaleedu@gmail.com என்ற முகவரிக்கு ஒரு Test Mail அனுப்புங்கள். கட்டுரைகள் உங்கள் முகவரிக்கு அனுப்பப்படும்.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக