செவ்வாய், 10 டிசம்பர், 2013

22% லாபத்தில் REVMUTHAL போர்ட்போலியோ

' REVMUTHAL' போர்ட்போலியோ நேற்றைய நிலவரப்படி 22% லாபம் கொடுத்துள்ளது. இது சராசரியாக மூன்று மாதங்களில் கிடைத்த லாபம் ஆகும்.


நமக்கு வந்த மினன்சல்கள் மூலம் 15 நண்பர்கள் நமது போர்ட்போலியோவைத் தொடர்வதாக அறிந்து கொண்டோம். உத்தேசமாக தொடரும் நண்பர்கள் மொத்தமாக பத்து லட்சம் முதலீடு செய்து இருந்தால் இந்நேரம் இரண்டு லட்சம் ரூபாய் மேல் வரை லாபம் கிடைத்து இருக்கும்.

எமது தளம் தமிழ் நண்பர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் பயன்பட்டு இருப்பதை எண்ணி மகிழ்கிறோம். சில சமயங்களில் வேலைப் பளு காரணமாக மின் அஞ்சல்களுக்கு உடனடி பதிலளிக்க முடியவில்லை. மன்னிக்கவும்!

22% லாபத்தில் போர்ட்போலியோ 


இரண்டாவது காலாண்டு நிதி முடிவுகளின் பின் நமது பங்குகளின் நிதி நிலவரங்களையும் தனித்தனியே பதிவுகளாக எழுதி உள்ளோம். கீழே கொடுக்கப்பட்ட கட்டுரைகளை பார்க்க..


சில குறிப்புகள்:
  • நாம் பரிந்துரைத்த பங்குகள் இதுவரை எதிர்மறையில் செல்லவில்லை.
  • ASHAPURA பங்கு 57% லாபம் கொடுத்து உள்ளது.
  • ASTRA, FINOLEX பங்குகள் 40% லாபம் கொடுத்து உள்ளன.
  • மீதி உள்ள பங்குகளில் HCL தவிர மற்ற பங்குகள் 10% மேல் லாபம் கொடுத்து உள்ளன.
இந்த பங்குகள் இன்னும் மேலே உயரும் திறனுடையவையாகவே உள்ளன. அதனால் இந்த பங்குகளில் தொடரலாம்.

முதலீடு தொடர்பான எமது பதிவுகளை பெற விரும்புவர் மின் அஞ்சல், முகநூல், ட்விட்டர் போன்ற ஏதேனும் ஒன்றில் எம்மைத் தொடரலாம். 

விவரங்களுக்கு, முதலீடைத் தொடர...
« முந்தைய கட்டுரை
Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக