வெள்ளி, 6 டிசம்பர், 2013

50% லாபம் கொடுத்த Finolex பங்கு

நமது போர்ட் போலியோவில் "FINOLEX CABLES" என்ற பொறியியல் நிறுவனத்தை பரிந்துரைத்து இருந்தோம்.

மேலும் விவரங்களுக்கு இங்கு பார்க்க :

இந்த நிறுவனம் 52 ரூபாய்க்கு பரிந்துரைக்கப்பட்டது. தற்போது 78 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. அதாவது நமக்கு இரண்டு மாதங்களில் 50% லாபம் கொடுத்து உள்ளது.

இந்த உயர்வுக்கு நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது.



இங்கு நிறுவனத்தின் சுருக்கமான நிதி நிலை அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

FINOLEX2Q'132Q'12Growth
Net sales(in Cr)5935851.3%
EBIT(in Cr)957428%
Op. Profit(In Cr)795738%

நிதி நிலை அறிக்கையின் முக்கிய அம்சங்களை பார்ப்போம். கடந்த வருட காலாண்டு அறிக்கையுடன்  ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது.
  • விற்பனை 1.3% அதிகரித்துள்ளது.
  • நிகர லாபம் 38% அதிகரித்துள்ளது.
  • செலவுகள் கணிசமாகக் குறைந்துள்ளது..
  • Franklin Mutual Fund நல்ல முடிவுகளை தொடர்ந்து இந்த நிறுவனத்தின் 6 லட்சம் பங்குகளை வாங்கியுள்ளது.
கடந்த வருடத்தில் எதிர்பார்த்த நிதி முடிவுகள் இல்லாததால் பங்கு விலை கடுமையாக சரிந்தது. நாம் குறைந்த விலையில் இருந்த போது பங்கை வாங்கியது  நமக்கு 50% லாபம் கிடைக்க முக்கியக் காரணமாக அமைந்தது.

இன்னும் வளர்ச்சியின் அடிப்படையில் பார்த்தால் இரண்டு வருடங்களில் நமது முதலீடு இரண்டு மடங்காககே கூட வாய்ப்பு உள்ளது. அதனால் இந்த பங்கில் தொடருவோம்.

நமது பதிவுகளை பெற விரும்புவர் மின் அஞ்சல், முகநூல், ட்விட்டர் போன்ற ஏதேனும் ஒன்றில் எம்மைத் தொடரலாம். 

விவரங்களுக்கு, முதலீடைத் தொடர...

எளிய வழியாக muthaleedu@gmail.com என்ற முகவரிக்கு ஒரு Test Mail அனுப்புங்கள். கட்டுரைகள் உங்கள் முகவரிக்கு அனுப்பப்படும்.

« முந்தைய கட்டுரை




Email: muthaleedu@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக